சினிமா, அரசியல், வியாபார, விளம்பர உலகங்கள், ஆன்ராடு போன், 4-ஜி வேகம், கேட்டதைக் கொடுக்கும் கூகுள் என இயங்கும் உலகில் இன்றைய இளைஞர்களுக்கு இறை நம்பிக்கை இருக்கிறதா? அப்படியே இருந்தாலும் இறைநம்பிக்கையின் தீவிரம்தான் என்ன?
ஹிந்து மத இளைஞர்களால் பிற மதத்தினர் கேட்கும் மதம் சார்ந்த கேள்விகளை எதிர்கொள்ள முடிகிறதா?எதிர்கொள்ள நினைத்தாலும் ஹிந்து இளைஞர்களுக்குச் சரியான பதில்கள் தெரியுமா? எத்தனை சந்தேகங்கள், எத்தனை கேள்விகள்?
வாசகர்களின் கேள்விகளுக்கு தெளிவு கொடுக்கிறார், சுவாமி விமூர்த்தானந்தர்.
நம் புனித நூல் பகவத்கீதையிலிருந்து ஒரு சுலோகம்கூடத் தெரியாமல் பல ஹிந்துக்கள் இருக்கிறார்களே? இது நமக்கு அவமானம் இல்லையா?
– கற்பகலட்சுமி, மையிலாப்பூர்
சுவாமிஜி: இது வருத்தப்பட வேண்டிய விஷயம். வீடுகளில் குழந்தைகளுக்குப் பெரியவர்களோ, தா, தந்தையரோ நம் புராண இதிகாசங்களைப் பற்றிச் சோல்வது குறைந்துவிட்டது.பல வீடுகளில் தாத்தா, பாட்டிகள் பேரன் பேத்திகளுடன் சேர்ந்து வாழ்வதில்லை.
கூட்டுக் குடும்பம் இன்று பறவைகளிடம் இருக்கிறது, மனிதர்களிடம் இல்லை.
சின்மயா மிஷன் போன்ற பள்ளிகளில் 6-வது வகுப்பு முதல் ஒரு வருடத்திற்கு பகவத்கீதையின் ஓர் அத்தியாயம் படித்து மனப்பாடமாகச் சோல்ல வேண்டும். அதற்குப் பரிசும் அளிக்கின்றனர்.
மற்ற பள்ளிகளிலும் இதைக் கடைப்பிடித்தால் நம் குழந்தைகளுக்கு ஏட்டுக்கல்வி மட்டும் இல்லாமல் நல்ல பண்பாட்டுடன் கூடிய ஆன்மிகக் கல்வியும் கிடைக்கும்.
அரசு இதைச் ஆன்றோர்களும் செயத் தவறினால் அது நமது மதத்திற்கு அவமானம்தான்.
நவராத்திரி போன்ற சில வைபவங்களில் சிறுமிகளை அம்பாளாக பாவித்து வழிபடுவதேன்?
– அ.யாழினி பர்வதம், கே.கே.நகர் கிழக்கு.
குமாரி பூஜை என்பார்கள் இதனை. நமது ஹிந்து மதம் பெண்களுக்குக் கொடுக்கும் மரியாதை இது.
சிறுமியர் எல்லாம் சீதையின் வடிவம், சிறுவர் அனைவரும் ராமரே என்று ஆர்.எஸ்.எஸ்.இயக்கப் பள்ளிகளில் பாடப் பெறும் ஒரு பாட்டு நமது எல்லாப் பள்ளிகளிலும் ஒலிக்க வேண்டும்.
அப்படி ஒலிக்காமல், போனதால்தான் டெல்லியில் நடு இரவில் நடுத்தெருவில் நிர்பயா என்ற ஒரு பெண்ணின் கண்ணீரை நம் நாடு கண்டது, கண்ணீர் விட்டது.
ஆகவே இளைஞர்களே, இனி நவராத்திரியின்போது மட்டுமல்லாமல், என்றும் பெண்களை மதியுங்கள்.
பெண்களே, நீங்களும் ஆண்கள் உங்களை மதிக்கும்படியான நடையிலும் நடத்தையிலும் இருங்கள்.
என் போன்ற பள்ளி மாணவ–மாணவிகளுக்குத் தாங்கள் கூற விரும்பும் அறிவுரை என்ன?
– அ.யாழினி பர்வதம்,
கே.கே.நகர் கிழக்கு.
இன்று நான் தலைகுனிந்து படிப்பது எல்லாம் நாளை தலை நிமிர்ந்து நிற்பதற்கே என்ற வைர வரிகளை உனக்குச் சோந்தமாக்கிக் கொள்.
நாட்டில் அநீதிகளும், அதர்மங்களும் மலிந்து வருவதைப் பார்த்தால், மனிதனுக்குக் கடவுள் பயமே இல்லாமல் போவிட்டதோ என்ற பயம் ஏற்படுகிறது. இதைத் தடுக்க முடியாதா?
– மல்லிகா அன்பழகன், சென்னை – 78.
அநீதிகளும், அதர்மங்களும் ஒரு பக்கம் வளர்ந்தாலும், இன்னொரு புறம் பயபக்தி பெருகி வருவதைப் பார்க்கிறோம்.
ஙிடஞுணூஞு ணாடஞுணூஞு டிண் ச்ணாணாஞுணணாடிணிண, ணாடஞுணூஞு டிண் ணணி ணாஞுணண்டிணிண. அதுபோல் நமது கவனமும், கருத்தும் கடவுள் மீது இருந்தால், எந்த வகையிலாவது நாம் அநீதிகள் மற்றும் அதைர்யங்களில் இருந்து காப்பாற்றப்படுவோம்.
டெங்கு காச்சல் வருவதற்கு முன்பு நம்மூரில் சர்வ சாதாரணமாக விளையும் பப்பாளிப் பழச்சாற்றைச் சாப்பிட்டால் காச்சலிலிருந்து தப்பிப்போம்.
அதுபோல் நல்லவர் தொடர்பு, பிரார்த்தனை, ஜபதியானங்கள், சமுதாயச் சேவை போன்றவை செதால், நமக்குக் கடவுளின் அருள் என்றும் இருக்கும்.
பலர் விளக்கேற்றி அர்ச்சனை செது வழிபடுகின்றனர்.சிலர் தியானம் மட்டும் செகின்றனர். இறைவனை அடைய, நம் பிரார்த்தனை நிறைவேற எது சரியான வழி?
– நித்யா, மந்தைவெளி
சுவாமிஜி: பலவிதமான வழிபாடுகளும் இறைவனைக் காணும் பாதையில் (இறுதியான ஒன்றை அடைய) மனிதனின் முயற்சிகளே. வாழ்க்கையின் துன்பங்களில் உழலும் மனிதன் ஆண்டவனின் அருளைத் தேடுகிறான்.முதலில் கோயில், பூஜை, அபிஷேகம், ஹோமம் என்று பலவிதங்களில் கடவுளைத் திருப்திப்படுத்த நினைக்கிறான்.
அவசர ஆள் வேண்டுவதெல்லாம் அவசர அருள், அவசர உதவி மட்டுமே. அது ஆண்டவனிடமிருந்து உடனே கிடைக்காது என்று அனுபவத்தில் தெரிந்ததும், பெரியவர்களின் சோற்பொழிவு, கீதை முதலியவற்றை கேட்டுத் தன் மனதை மெல்ல மெல்ல விரிவுபடுத்துகிறான்.
தனக்குள்ளே உள்ள இருதயத்தில் பகவானைக் கண்டு உணர்ந்து, தூய மனதுடன் தியானித்தாலே போதும் என்று அறிந்து கொள்கிறான்.
கப்பலோட்டிய தமிழர், சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரை – தேச விடுதலைக்குப் பணியாற்றத் தூண்டியது சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் ஒரு துறவி என வ.உ.சியின் வாழ்க்கை வரலாற்றில் படித்துள்ளேன். அது உண்மையா?
– எம். ஐயப்பன், பொன்மனை அஞ்சல்
தவத்திரு சுவாமி ராமகிருஷ்ணானந்தர் எனப்பட்ட சசிமஹராஜ்தான் அந்தத் துறவி. சுவாமிகள் மட்டும் சிதம்பரனாரைத் தடுத்தாட்கொண்டிராவிட்டால், வ.உ.சி.ஒரு திண்ணை வேதாந்தம் பேசும் துறவியாகப் போயிருப்பார்.
சுவாமி விவேகானந்தரின் சக சீடரான ராமகிருஷ்ணானந்தரின் சத்சங்கத்தால், வ.உ.சி அவர்கள் செயல்முறை வேதாந்தச் சிங்கமெனப் புறப்பட்டுக் கப்பலை மட்டுமல்ல, வெள்ளையனையும் ஓட்டினார்!
முருகனுக்கு இரு மனைவிகளா?
– முருகன், மாயவரம்
சுவாமிஜி: வள்ளி-தெவானை இருவருமே முருகப்பெருமானின் மனைவிகள் அல்லர். இரண்டு சக்திகள். ஜீவாத்மா பரமாத்மாவை அடைய இச்சா சக்தி, கிரியா சக்தி இரண்டும் தேவை. இவ்விரண்டையும் பிரதிபலிக்கும் வகையில் வள்ளி, தெவானை விளங்குகின்றனர்.
வள்ளி வேடுவ ஜாதியைச் சேர்ந்த குறத்தி. தெவானையோ தேவர் தலைவனான இந்திரனின் மகள்.கடவுளை அடைய பக்தி ஒன்றே தேவை. ஜாதி முக்கியமில்லை. வள்ளி தன் பக்தியால் குறத்தியாக இருப்பினும் முருகனை அடைந்தாள். கடவுள் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவர். எல்லோரையும் ஏற்று அருள்பவர்.
நாம் நல்ல காரியங்களுக்காக வெளியில் செல்லும் பொழுது விதவைகள் எதிரில் வந்தால் அதை அபசகுணம் என்று கூறுவது உண்டு. இது சம்பந்தப்பட்ட பெண்ணின் உணர்வைப் புண்படுத்துமே?
– மன்னைமாதவன், அம்பத்தூர்.
விதவைத்தனம் அபசகுணம் அல்ல. இது ஹிந்து மதத்தில் புரையோடிப் போன ஒரு புற்றுநோ.
ஸ்ரீராமகிருஷ்ண மடங்களின் அதிஷ்டான தேவதையாக, நாங்கள் எந்தக் காரியம் செதவதற்கு முன்பும் அன்னை ஸ்ரீசாரதாதேவியை வணங்கிய பிறகே தொடங்குவோம். அந்தத் தெவத்தாயும் ஒரு விதவைப் பெண்மணிதான்.
தொகுப்பு: திருமயிலை கற்பகலட்சுமி சுரேஷ்