மகேந்திரநாத் குப்தா என்ற ஆசிரியர்
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரை சந்திக்க விரும்
பினார். ஒருநாள் தக்ஷிணேஸ்வரத்தில் ஸ்ரீராம
கிருஷ்ணரை சந்தித்தார். அப்போது ஸ்ரீராமகிருஷ்ணர் அவரிடம் ‘‘உனது கடவுள் நம்பிக்கை… உருவ வழிபாட்டிலா, அருவ வழிபாட்டிலா” என்று கேட்டார்.
‘‘சுவாமி, அருவத்தில்தான் எனக்கு நம்பிக்கை என்றார். ஸ்ரீராமகிருஷ்ணர், ‘‘சரி, ஏதாவது ஒன்றில் நம்பிக்கை வைப்பது நல்லது. ஆனால் இறை
வனுக்கு உருவமும் உண்டு, அருவமும் உண்டு” என்றார்.
அப்போது மகேந்திரநாத், ‘‘சுவாமி இறைவன் உருவம் உடையவர் என்பதை ஒப்புக்கொண்டாலும் அவர் களிமண் பொம்மையாக இருக்கக் கூடுமா” என்று கேட்டார்.
ஸ்ரீராமகிருஷ்ணர், ‘‘களிமண் பொம்மையை வழிபடுவது தவறாக இருந்தால் ஆண்டவனாகிய அவனுக்கு அது தெரியாதா? தன்னைத் தான் அந்த மண் வடிவில் வழிபடுகிறார்கள் என்பதை அவன் அறிய மாட்டானா? அவனை நாம் வழிபடுகிறோம் என்ற ஒன்றே அவனுக்கு மகிழ்ச்சியைத் தருமே. ஞானமும் பக்தியும் உண்டாவதற்கான வழியை அதில் இருந்தே பெற முயற்சி செய்யலாம். ஒரு தாய் தன் குழந்தைகளின் ஜீரணசக்திக்கு ஏற்ப உணவு சமைக்கிறாள். அதுபோல யாரால் எவ்வளவு ஜீரணிக்க முடியுமோ அந்த அளவுக்கு பூஜை முறைகளை நமது முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர்” என்று விளக்கினார்.
அவ்வளவுதான், மகேந்திரநாத் குப்தாவின் மனம் மாறியது. பிறகு ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் இல்லறச் சீடரானார்.
இவர்தான் ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் எனும் நூலைத் தொகுத்தவர். ‘ம’ என்பது இவரது பெயரின் சுருக்கமாகவும் புனைபெயராகவும் அமைந்தது.