கடந்த ஜூலை 22-ம் தேதி சந்திரயான் 2 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. பல்வேறு கட்ட பயணங்களுக்குப் பிறகு சந்திரயான் விண்கலத்தின் ஒரு பகுதியான ஆர்பிட்டர் கலன் நிலவின் சுற்றுவட்டப் பாதை யில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப் பட்டது. கடந்த செப்.8-ம் தேதி சந்திரயான் 2 விண்கலத்தின் மற்றொரு பாகமான லேண்டர் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக வேகமாக சென்று லேண்டர் நிலவின் தரையில் மோதியதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். நிலவில் தரைப் பகுதியில் இருந்து 100 கிலோ மீட்டர் உயரத்தில் ஆர்பிட்டர் கலன் நிலவை வெற்றிகரமாக சுற்றி வருவதால் திட்டத்தின் 95 சதவீத பணிகள் வெற்றி அடைந்ததாக இஸ்ரோ அறிவித்தது.
நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர் கலன் ஆய்வுப் பணிகளைத் தொடங்கி நிலவில் உள்ள பள்ளங்கள், சூரிய ஒளியின் தன்மை நிலவில் எந்த அளவுக்கு உள்ளது என்பதை பற்றிய படங்களையும் அனுப்பியுள்ளது. அதனுடன் பூமியின் காந்த மண்டலத்தையும் நிலவுடன் ஒப்பிட்டு ஆர்பிட்டர் ஆய்வு செய் யும் என்றும் இஸ்ரோ தெரிவித்து இருந்தது.நிலவின் புறக்காற்று மண்டலத்தில் ஆர்கான் 40 வாயு மூலக்கூறுகள் இருப்பதை ஆர்பிட்டர் கலனில் உள்ள சேஸ் 2 என்ற கருவி மூலம் ஆய்வில் உறுதிப்படுத்தியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.ஆர்கான் 40 வாயு மூலக்கூறுகள் ரேடியோ அலைக்கற்றைகளை உருவாக்க பயன்படக் கூடியது என்றும், பூமியில் அரிதாகக் காணப் படும் ஒன்று என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.ஆர்கான் 40 வாயு மூலக்கூறுகள் ரேடியோ அலைக்கற்றைகளை உருவாக்க பயன்படக் கூடியவை. இத்தகைய ஆர்கான் 40 வாயு மூலக்கூறுகள் பூமியில் அரிதாகவே காணப்படுகின்றன