அது 1965 ஆம் வருடம். இந்தியா பாகிஸ்தான் போர் உச்ச கட்டத்தை எட்டியிருந்த நேரம்.. காஷ்மீருக்காக நடந்த போரில் பாக், வெகுவாக முன்னேறிக் கொண்டிருக்க, காஷ்மீருக்கு இந்திய ராணுவ உதவி அவசரமாக தேவைப்பட்டது…
தலைநகர் டெல்லி ராணுவ தலைமையகத்தில் இருந்து, ஶ்ரீநகர் ஒரு அவசர செய்தியை பெற்றது.” போரில் ஶ்ரீநகர் வீழ்ந்தாலும் கவலைப் பட வேண்டாம். ஆனால் எக் காரணம் கொண்டும், ஶ்ரீநகர் விமான நிலையம் மாத்திரம் எதிரிகள் வசப்பட்டு விடக் கூடாது.. நாங்கள் இங்கிருந்து ராணுவ துருப்புக்களை விமானங்களில் அனுப்பி வைக்கிறோம்” என்று…!
ஆனால் ஶ்ரீநகர்,”இங்கு எங்கு பார்த்தாலும் கடுமையான பனிப் பொழிவு.. விமான நிலையத்தில் உதிரம் உறைந்து போகுமளவு கடுமையான பனிமழை பொழிவு..! இதன் ஓடுதளத்தில் விமானங்கள் தரையிறங்குவது என்பது இயலாத காரியம் மட்டுமல்ல.. கடினமானது” என்று பதில் அனுப்பியது..
உடனே டெல்லி,”தற்காலிக பணியாளர்கள் எவ்வளவு வேண்டுமானாலும், எவ்வளவு ஊதியத்தில் வேண்டுமானாலும் நியமித்திக் கொள்ளுங்கள்..
விமான நிலையம் மட்டும் முக்கியம்.. தகுந்த நடவடிக்கை உடனே எடுக்கவும்” என பதில் உத்தரவிட்டது..
“இங்கே வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை… கிடைக்காது” என ஶ்ரீநகரில் இருந்து பதில் வந்தது.
அப்போது தான் ராணுவ தலைமையகத்தின் கவனத்திற்கு, *”சங்பரிவார்”* இயக்கம் நினைவிற்கு வந்தது.
அப்போதி நள்ளிரவு 11.00 மணி. தொலைபேசிகள் சுழன்றன. ஒரு ராணுவ ஜீப், ஶ்ரீநகரின் சங்பரிவார் அலுவலக வாசலில் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய உயர் அதிகாரிகள், RSS அலுவலகத்தினுள் நுழைந்தனர்.
உள்ளே, ராஷ்ட்ரிய ஸ்வயம்ஷேவக்குகளின் இளைஞர் மீட்டிங் நடந்து கொண்டிருந்தது. திரு. *பிரேம்நாத் டோக்ரா* மற்றும் திரு. *அர்ஜூன்* ஆகியோர் அங்கிருந்தனர்.! அவர்களிடம் ராணுவ அதிகாரிகள் நிலைமையை விளக்கி, அவர்களால் விமான நிலையம் பனிப் பொழிவை அகற்ற உதவ முடியுமா,.? எனக் கேட்டனர்.
அர்ஜூன்,”நிச்சயமாக..! உங்களுக்கு உதவி செய்ய எத்தனை பேர் வேண்டும்..?” எனக் கேட்க, அதிகாரி, “குறைந்த பட்சம் ஐம்பது, அறுபது பேர் போதுமானது. மூன்றிலிருந்து நான்கு மணி நேரத்துக்குள் அந்த பனிப் பொழிவை நீக்கி, விமான ஒடுதளத்தை தயார் நிலையில் வைக்க வேண்டும்..!” என்றனர்..!
“நாங்கள் அறுநூறு பேரை தருகிறோம்” என அர்ஜூன் கூறியதும், அதிர்ந்து போன அதிகாரிகள், “இந்த நள்ளிரவில் அத்தனை பேர் உங்களால் தரவியலுமா” என ஆச்சர்யமாக கேட்க, அர்ஜூன், “ஐயா..! நீங்கள் எங்களை அங்கே கொண்டு செல்ல வாகன வசதிகளை மட்டும் ஏற்பாடு செய்யுங்கள்..
நாங்கள் இன்னும் 45நிமிடங்களில் தயாராக இருப்போம்” என்று கூறினார்..!
என்ன ஒரு தன்னர்ப்பளிப்பு சேவை RSS இயக்கத்திற்கு என்பதை அன்று அந்த அதிகாரி கண்டார். அடுத்த அரைமணி நேரத்தில், 600 ஸ்வயம்ஷேவக்குகள் அங்கே ஓர் ராணுவமென அணிவகுத்தனர்.!
அதிகாரி டெல்லிக்கு,”பனிப் பொழிவை நீக்கும் பணி ஆரம்பித்து விட்டது. நீங்கள் எந்த நேரத்திலும் ராணுவ விமானங்களை இங்கே அனுப்பலாம். தயார் நிலையில் உள்ளோம்” என தகவல் அனுப்பினார்.
ஆச்சர்யப்பட்டுப் போன டெல்லி தலைமையகத்தில்,” தயார் நிலையா…!?? அதற்குள் எப்படி இவ்வளவு வேலையாட்களை சேகரித்தீர்கள்..!” எனக் கேட்க, அதிகாரி, “அறுபது பேர் அல்ல!! அறுநூறு பேர். அவர்கள் லேபர்கள் அல்லர். *ராஷ்ட்ரிய ஸ்வயம்ஷேவக்குகளின் உறுப்பினர்கள்*, என பதில் தந்தார்..!
அன்று இரவு முழுவதும் எமது RSS தொண்டர்கள் கடுமையாக கடமையாற்றிக் கொண்டு இருந்தனர். மறுநாள் அக்டோபர் 27அன்று 329 சீக்கிய ராணுவ வீரர்களை சுமந்து கொண்டு இந்திய ராணுவ விமானம், ஶ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறங்கியது. ஒன்றல்ல, இரண்டல்ல…. எட்டு விமானங்கள் தரையிரங்கின. அத்தனை ராணுவ வீரர்களும் ஆயுதங்களோடு, இறங்க உதவி செய்த RSS தொண்டர்கள், போர் தளவாடங்களை அதன் நிலைகளில் நிறுவவும் உதவினர்.
விமான நிலையம் எதிரிகள் பிடியில் சிக்காமல் காப்பாற்றப் பட்டதோடு, ராணுவ வீரர்களின் ஓய்வு நேர இடைவெளிகளையும் RSS தொண்டர்கள் தங்களின் சேவையினால் நிரப்பினார்கள்..!
– முருகானந்தம்