ஆட்டோ சங்கரா, சிகப்பு ரோஜாவா?

நமது பண்பாட்டின் அஸ்திவாரமே நாம் நமது பெரியோர்களை, முதியோர்களை மதிப்பது, குழந்தைகளை அரவணைப்பது, பெண்களை போற்றுவது போன்றவைதான். சங்க காலம் முதல் (இஸ்லாமிய, பிரிட்டிஷ் படையெடுப்புக்கு முன்) சமீப காலம் வரை போரின்போது ஆவினம், முதியோர், பெண்டிர், குழந்தைகளை தவிர்த்து பிறருடன் போரிட்ட தர்மப் போராளிகள் நாம். இந்த ஹிந்து மத பண்பாட்டு மூல்யங்களை அழித்து காசாக்கும் கசாப்புக் கடையாக செயல்பட்டது தான் காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரம் உள்ளிட்ட செயின்ட் ஜோசப் ஹாஸ்பிஸ் என்னும் கருணையில்லா இல்லம்.

முதலில் ஹாஸ்பிஸ் (Hospice) என்னும் வார்த்தை ஏதோ ஹாஸ்பிடல் போன்று நமக்கு தோன்றுகிறதல்லவா? இதற்கு ஆங்கில  “A Home providing care for sick and terminaly ill” என்றும் “Facility designed to
provide caring environment for meeting the physical and emotional needs of the terminally ill” என்றும் இருக்கிறது.

அதாவது உயிர் போய்விடும் என்று உறுதியாக  கூறப்பட்டவர்களுக்கு அன்பு, அனுசரணையோடு ஆதரவான, இணக்கமான சூழ்நிலையோடு, வைத்தியமும் செய்து வைத்துக்கொள்ளும் ‘நல்வாழ்வு மையம்’, ‘பிணியாளர் பேணகம்’, ‘சமய நிறுவனங்களால் நடத்தப்படும் இயலாரகம்’ என்பன அர்த்தங்கள்.

இப்படிப்பட்ட அர்த்தம் கொண்ட சொல்லுக்கு  நடத்தப்பட்டது தான் இந்த கருணையற்ற இல்லம். சரி, சப்ஜெக்டுக்கு வருவோம். இதை நடத்தியவர் யார்? எங்கிருந்து அவருக்கு பணம் வருகிறது? முழு விவரம் அறிந்து கொள்வோமா?

இங்கிலாந்து நாட்டில் லீட்ஸ் நகரிலுள்ள Lights for the Blinds என்னும் கிறிஸ்தவ மதமாற்றும் அமைப்பு பாரதத்திலுள்ள குருடர்கள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளி, புத்தி சுவாதீனம் அற்றோர் ஆகியோருக்கு ஆதரவாக பணம் அனுப்பி கேரளாவை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரி தாமஸ் ரதப்பள்ளி என்பவர் மூலமாக தமிழ்நாட்டில் 5 இடங்களில் செயின்ட் தாமஸ் ஹாஸ்பிஸ் அதாவது பிணியாளர் நல்வாழ்வு மையத்தை 2006ல் ஏற்படுத்தி  நடத்தி வருகிறது. இந்த 5 இடங்களிலும் சேர்ந்து 1,000 பேர் தங்க வசதியுள்ள காப்பகம், இவற்றுக்கு யார் யார் வருகிறார்கள், எப்படி அழைத்து வரப்படுகிறார்கள் என்பதை பார்ப்போம்.

வீட்டை விட்டு வெளியேறிய முதியோர், சாலைகளில் உறங்கும் அனாதைகள், மனநலம் குன்றியோர், போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வரப்படும் ஊர், மொழி தெரியாதோர், இவர்களை போலீஸ், அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர் பெயரில் ஒளிந்து கொண்டிருக்கும் ஏஜெண்டுகள், பணத்துக்காக இங்கு அழைத்து வருகிறார்கள். இல்லை ஆசைகாட்டி கடத்தி வருகிறார்கள்.

‘நல்லது தானே செய்கிறார்கள். போக்கிடம் இல்லை. தங்க இடம் இல்லை. அடுத்த வேளைக்கு உணவில்லை. மருத்துவமிலை. பாதுகாப்பில்லை. வாழ்வே சூன்யமாகி விட்டவர்களுக்கு வாழ்க்கை தருவதை ஏன் கொச்சப்படுத்துகிறீர்கள்?’ என நீங்கள் கேட்பதும் காதில் விழுகிறது.

அழைத்து வரப்பட்டவர்கள் அத்தனை  பேருக்கும் அவர்கள் எவ்வளவு மனநிலை, உடல்நிலை நன்றாக இருந்தாலும் செயின்ட் ஜோசப் ஹாஸ்பிஸ் கணக்குபடி விரைவில் சாகப் போகிறவர்கள். நீங்கள் ஏன் இப்படி எழுதுகிறீர்கள்? அங்கே உள்ளவர்கள் என்ன அப்படி கொடூரமாகவா நடந்துகொள்வார்கள்? பார்த்தால் தெரியாதா என்று கேட்பதும் புரிகிறது.

தற்போது மாநில அரசு உள்ளே அதிரடியாக நுழைந்து கண்டுபிடித்த விவரம் – அடைக்கப்பட்டிருந்தவர்களின் 86 பேர், அவர்கள் சம்மதமின்றி கட்டாய அடைப்பில் இருந்திருக்கிறார்கள் என்பதுதான். சரி, இந்த ‘பிணியாளர் பேணக’த்தின் இணையதளத்தில் வருபவர்களை எப்படி நல்லமுறையில் கவனிக்கிறார்கள்” என்ற படம் வெளியிடப்பட்டுள்ளதே என்பது பலர் வைக்கும் கேள்வி.

அது உண்மையானால் செங்கல்பட்டு அருகில் செயின்ட் ஜோசப் ஹாஸ்பிஸில் புகுந்த ஹெல்த் ஆபிசர்கள் அங்கு முதியோர்கள் இருந்த காட்சி, அடைக்கப்பட்டிருந்த கொடூரம், சுகாதாரமற்ற நிலைமை, மனிதாபிமானம் மரத்துப் போயிருந்த காட்சி என்பன இந்த காப்பகத்தின் நோக்கம் ‘காப்பது அல்ல, விரைவில் பரலோகம் அனுப்பி எலும்பை விலை பேசுவதுதான்’ என்பது தெரிகிறது.

‘ச்ச்சீ… ஓவரா போகாதீங்க’ என நம்மில் பலர் முணுமுணுப்பதும் கேட்கிறது. ஆனால் ஒரு நாளைக்கு 3 அல்லது 4 பேர் உயிர் விடுவதும் கடந்த ஆண்டில் மட்டும் 1596 பேர் பரலோகத்திற்கு அனுப்பப்பட்டதும் அங்குள்ள வேலட் என்னும் உடலை புதைக்கும் முறை, கமலஹாசன் நடித்த திகில் படம் சிகப்பு ரோஜாவில் வீட்டுச் சுவற்றில் புதைக்கும் காட்சி போலவும், 1990களில் பலரை கொன்று புதைத்த  கிரிமினல் ஆட்டோ சங்கர் மாடல் புதைப்பும் போல, பேங்க் லாக்கரில் பொருளை வைக்கும் அறை போல அடுக்கடுக்காக ஆழமாக இருப்பதும் குற்றம் சாட்டுபவரின் சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

இந்த வேலட் புதைப்புக்கும் காப்பகத்துக்குமே இவர்கள் அரசு அனுமதி பெறவில்லை என்பது வேறுவிஷயம். இதற்குள் செல்லும் உடல் ஒரு மாதத்திற்குள் அழுகி சதை தனியாகவும் எலும்பு தனியாகவும் விழுவதை மாதத்திற்கு ஒருமுறை அகற்றி எலும்புக்கூடு ஏகப்பட்ட விலைக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பூமியில் புதைக்காமல் வேலட்டில் புதைப்பதற்கு காரணம் கள்ளத்தனமான எலும்புக்கூடு ஏற்றுமதி தான். இது போன்ற உண்மையெல்லாம் விசாரணையில் விரைவில் வெளியே வரும்.

முதியோர்களுக்கு உண்டாக்கும் ஆபத்து சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்ல, தர்மத்துக்கும் எதிரானது. ஏனெனில் அந்த வயதில் அவர்களால் தங்களை பாதுகாத்துக் கொள்ளமுடியாது. அதனால்தான் செயின்ட் ஜோசப் ஆம்புலன்ஸில் ஒரு பிணத்தோடு இரண்டு முதியவர்களை காய்கறி மூட்டையோடு தூக்கிப்போட்டு அனுப்பிய கொடூரமும் நிகழ்ந்துள்ளது. அந்த வயது முதிர்ந்த பாட்டி கூக்குரல் இடவில்லை எனில் இந்த கொடூரம் உலகுக்கு தெரிய இன்னும் பல நாளாகியிருக்கும். இவர்களை பசி பட்டினி போடும்போது பேச்சு அடங்கிவிடும். மூட்டையாக கட்டி எத்தனை பேரை எலும்புக்காக உயிரோடு வேலட்டில் போட்டார்களோ? அந்த ஜீஸசுக்கே வெளிச்சம். தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியாத இந்த முதியோர்கள், இவர்களை நம்பி போகும்போது கொன்று குவிக்கிறார்களே, இதற்கு ஏது பாவமன்னிப்பு? இதை ஏசு கூட மன்னிக்க மாட்டாரே? இதற்காக மதபேதமின்றி அனைவருமல்லவா சேர்ந்து குரல் எழுப்பவேண்டும்!

ஒருநாட்டின் மூத்த குடிமகனை காப்பது அரசின் கடமை மட்டுமல்ல, சமுதாயத்தின் கடமையும் கூட. அவர்களை நம்ப வைத்துக் கழுத்தறுப்பது, கொல்வது ஒரு மதத்தின் சார்பாக இயங்கும் காப்பகத்துக்கு சரியா? இதை மனிதத்தன்மை உள்ள ஒவ்வொருவரும் கண்டிக்க வேண்டாமா? இந்த கொலைக்கு காரணமானவர்கள் செயின்ட் ஜோசப் இல்லம் மட்டுமல்ல, உடந்தையாக ஆயிரக்கணக்கானோர் இருந்துள்ளனர். அது இந்த சமுதாயத்தின் அவமானம் தானே! காப்பகம் கொலையிடமாக மாறியதன் காரணம் என்ன? பணம்! பணம்! பணம்! எலும்புக்கூட்டுக்கு உலக சந்தையில் லட்சக்கணக்கில் காசு. அதுவும் உலக கள்ளச் சந்தையில் பாரதமே ஏற்றுமதியில் முதலிடம்.

ஏதோ பஜ்ஜி, போண்டா, அதிரசம் போல கை, கால், தலை, பல்லுடன் கூடிய தலை என ஒவ்வொன்றுக்கும் ஒரு ரேட். அதுவும் முழு எலும்புக்கூடும் ஒரே ஒரு நபருடையதானால் அதுமட்டுமே 8 – 10 லட்சத்துக்கு விலை போகிறது. மனித எலும்புக்கூட்டின் உலக கள்ளச்சந்தையின் தலைமையகம் பாரதம். 1984ல் மட்டும் 60,000 எலும்புக்கூடுகள் ஏற்றுமதியாம். குழந்தைகளின் எலும்புக்கூடு கூட 1,500 என்பது நெஞ்சை உலுக்கும் புள்ளிவிவரம். பல மாநிலங்களில் சிறுவர்கள் கடத்தப்பட்டு எலும்புக்காக கொல்லப்படுகிறார்கள் என்பது அதிர்ச்சியூட்டும் செய்தி. இந்த கள்ளச் சந்தையின் பாரத தலைமையகம் மேற்கு வங்கம். ஆண்டுக்கு ரூ. 7 கோடி வியாபாரமாம். கம்யூனிஸ்ட் கட்சி ஆண்ட 30 ஆண்டுகளில் தான் வங்கம் எலும்புக்கூட்டு வியாபாரத்தில் கோலோச்சியதாம். காரணம் காணாமல் போனவர்கள், கொல்லப்பட்டவர்களுக்கு விசாரணை ஏதும் இல்லை என்பதால்.

இப்படிப்பட்ட மார்க்கெட்டுக்குள் இப்போது கிறிஸ்தவம்! செயின்ட் ஜோசப் ஹாஸ்பிஸில் வேலை நடப்பதில்லை. அங்கு அவர்களுக்கு அதைவிட மிகப் பெரிய லாபம் கிடைக்கிறது. சாலையில் திரிபவர்களை கலெக்ட் செய்துகொண்டு சேர்க்கும் கும்பல், ‘பிணியாளர் பேணக’த்தில் என்ன நடக்கிறது என்பதை கண்டுகொள்ளாமல் மாமூல் கறக்கும் அரசாங்கம்.

இப்படி  கொலைக்களமாக மாறிய கொடூரத்தை மதவேலி காத்ததால் கண்டும் காணாமல் போன ஊடகங்கள். மனித எலும்புக்கூடுகளை வாங்கும் ஒரு பன்னாட்டு மத சதிக்கும்பலின் புகலிடம்தான் செயின்ட் ஜோசப் ஹாஸ்பிஸ். அதை தோண்டத் தோண்ட எலும்புக் கூடுகளும் வரும். ஏராளமான மறைக்கப்பட்ட உண்மைகளும் வரும். உண்மைகளை வெளிக் கொணர்வோம், வெளிநாட்டு சக்திகளை முறியடிப்போம்.

 

என்னய்யா வருது? என்.ஐ.ஏ. வருது!

கடந்த பல ஆண்டுகளாக பாரத நாடு நெடுக பயங்கரவாதத்தை வேட்டையாடி வேட்டையாடி பெரும் புகழ் பெற்றுள்ள ‡ஐஅ (தேசிய புலனாய்வு ஏஜென்ஸி) வசம் ஆள் கடத்தும் குற்றவாளி கும்பல்களை வளைத்து ஒடுக்கும் பொறுப்பு கொடுத்திருக்கிறது பாரத அரசு. சென்ற வாரம் மத்திய அமைச்சரவை ‘டிராபிக்கிங் ஆஃப் பெர்சன்ஸ் பில் – 2018’ என்ற மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தேதி குறித்து ஆள் கடத்தும் ‘கருணை இல்ல’ கும்பல்களை பொறிவைத்துப் பிடித்து ஆயுள் தண்டனை வரை கிடைக்கச் செய்வதற்கு என்.ஐ.ஏவுக்கு அதிகாரம் அளிக்க இந்த மசோதா வகை செய்கிறது.

அதிரடி சோதனை நடத்தி ஆட்களை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் வரை என்.ஐ.ஏ. களத்தில் இருக்கும். இதன் வலுவான கரங்கள் மாநில, மாவட்ட, மத்திய மட்டங்களில் லாகவமாக செயல்படும்.

சமீபத்தில் கிடைத்த செய்தியின் படி பாலேஸ்வரம் பாதிரி தாமஸ் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

2 thoughts on “ஆட்டோ சங்கரா, சிகப்பு ரோஜாவா?

  1. Any updates on this sirs?
    Christian groups have media support and lot of support from govt officials… Why Kamal or Rajni didn’t condemn this… They will not touch christian groups because Kamal sponsor is christian groups.

  2. பாலேஸ்வரம் பாதிரி தாமஸ் கைது.
    எங்கே போனார்கள் கைக்கூலி தமிழ் பத்திரிகைகள்.

Comments are closed.