சமஸ்கிருதத்தை ஆழமாக கற்று ஆராய்தல் என்ற பெயரில் அதை பாரத பண்பாட்டிலிருந்து பிரித்து, செத்த மொழியாக்கி எகிப்திய மம்மிகளைப் போல அழகான பிணமாக அருங்காட்சியகத்தில் வைக்கும் முயற்சி அறிவுலகில் நடந்து வருகிறது.
இந்த வேலையில் முன்னணியில் நிற்பவர்கள் அமெரிக்க அறிஞர்களும் சோவியத் ரஷ்யாவின் சரிவுக்கு பின்பு ஆதரவற்று அனாதைகளான அமெரிக்க ஆதரவில் அவர்களது அடிவருடிகளாக உள்ள இந்திய கம்யூனிஸ்டுகளும் ஆவர்.
விளைவு, சமஸ்கிருதம் இந்திய பாரம்பரியத்தின், ஆன்மீக வழக்கங்களில், உலக வாழ்வியல் கண்ணோட்டத்தின் மையச் சரடாக இருந்த நிலைமாறி, அது அழகிய மொழி, ஆனால் அது பாரத பண்பாட்டின் மையச்சரடாக இருக்கும் நிலை தேவையற்றது என்ற கருத்து ஏற்படுத்தப்படுகிறது. அது சடங்களின் மொழி. இதில் ஆன்மீகம் ஏதுமில்லை. மாறாக, பெண்கள், தலித்துகள், முஸ்லிம்களுக்கு இம்மொழி விலக்கப்பட்டுள்ளது. அதனால் இது ஆதிக்க மொழி என்ற கருத்து ஏற்படுத்தப்படுகிறது.
தலித்துகள் உட்பட அனைவரும் சமஸ்கிருதம் கற்க வேண்டும் என்ற அண்ணல் அம்பேத்கரின் கருத்தையும் அதை நடைமுறைபப்படுத்த முனையும் சமஸ்கிருத பாரதியின் செயல்களையும் வெறுத்தொதுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இவர்களின் முக்கிய தலைவராக இன்று இருப்பவர் டாக்டர் ஷெல்டன் போலாக் என்ற அமெரிக்கர். இவர் கிரேக்க இலக்கியத்தில் பட்டமும் சமஸ்கிருத மொழியில் முனைவர் பட்டமும் ஹார்வார்டு பல்கலைக்கழகத்திலும் பெற்றவர்.
இவர் 1984ல் ராமாயணத்தை உள்நோக்கத்துடன் அர்த்தம் கற்பித்து விளக்கி நூல் எழுதினார். அதில், அரசர்கள் சாதாரணமானவர்கள் இல்லை. அவர்கள் தெய்வத்திற்கு இணையானவர்கள். தெய்வீக சக்தி கொண்டவர்கள். அரசர்கள் பிராமணர்களைக் கொண்டு யாக, யக்ஞங்களை நடத்தி அந்த தெய்வீக சக்திகளைப் பெற்றனர். மக்களை ஆள்வதற்காக பிராமணர்களை கொண்டு சட்டதிட்டங்களை எழுதி அதன்படி அரசாண்டனர்.
அரசர்களின் முக்கியமான கடமை பிராமணர்களை காப்பது. அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுத்து அவர்கள் மூலம் தனக்கு தெய்வீக சக்திகள் பெறுவது. தெய்வீக சக்தி பெற்றதால் தான் செய்யும் கொடுமையாக இருந்தாலும் அதை நியாயப்படுத்துவது. தன்னை எதிர்ப்போரை அரக்கர்களாக ராட்சதர்களாக சித்தரிப்பது. அவர்களை கொன்று அழிப்பது. அந்த அழிப்பை தீமையில் அழிவாக அதர்மதத்தின் அழிவாக சித்தரித்து நூல்களை எழுதுவது. அந்த கருத்தை மக்களிடம் பரப்புவது அரசர்களின் செயலாக இருந்தது.
அப்படி எழுதப்பட்டதுதான் வால்மீகி ராமாயணம். அதில் சமூக அடக்குமுறையும் ஜாதி ஒடுக்குமுறையும் தெளிவாக உள்ளது. அரசர்களான தரதனும் ராமனும் சுய சிந்தனையற்று, பிராமணர்களின் கூற்றை அப்படியே, இது நம்விதி என்று கருதி, ஏற்றுச் செயல்பட்டனர். சுயச்சிந்தனை கொண்ட இராவணனை அழித்தார்” என்று அந்த நூலில் விளக்கியுள்ளார்.
வி.எச்.பி. பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். போன்ற தீய சக்திகள் ராமாயணத்தை கையில் எடுத்துக் கொண்டு ரதயாத்திரை நடத்தி பாபர்மசூதியை தகர்த்தனர். அன்று ராவணன் இன்று முஸ்லிம்கள். எனவே இந்தியாவில் மதசார்பின்மை இல்லை. சமுக அமைதில்லை. உலகில் இன்று அனைவரும் ஏற்றிக் கொண்டுள்ள, மேற்கத்திய நாடுகளில் நிலவும் சமத்துவம் இந்தியாவில் இல்லை. இதற்கெல்லாம் காரணம் ராமாயணம்” என்று அவர் எழுதியும் பேசியும் வந்தார். (வருகிறார்). இது போதாதா முதல்வராக இருந்த மோடியை அமெரிக்காவுக்குள் அனுமதிக்க கூடாது என்று புகார் மனுவில் கையெழுத்திட்டு தன் நாட்டு (அமெரிக்க) அரசை நிர்பந்தம் செய்தார். சோனியா காங்கிரஸ் அரசு மகிழ்ச்சி அடைந்து அவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்தது. அவருக்கு உதவியாகவும் முன்னோடியாகவும் இருந்த லாயிட், குஸன் ரூடால்ப் ஆகியோருக்கு பத்ம்பூஷன் விருது இவற்றை வழங்கியதன் மூலம் பாரத பாரம்பரியத்தை இழிவுபடுத்தி மகிழ்ந்தது சோனியா காங்கிரஸ் அரசு.
இனி அரசு ஆதரவு கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டது. அல்லது ஏற்படும் என்று தெரிந்தது முன்னாள் கம்யூனிஸ்டும் இந்நாள் இந்திய பெருமுதலாளிகளில் ஒருவருமான இன்போஸிஸ் நாராயண மூர்த்தியின் (மூர்த்தி கிளாசிகல் லைப்ரரி ஆப் இந்தியா – என்ற அமைப்பு) ஆதரவுடன் தங்கள் பணியை தொடங்கின்றனர். இந்நிலையில் இவர்களின் கபடச் சிந்தனையில் உதித்தது ஒரு சூழ்ச்சி. அதாவது பாரம்பரிய மடங்களை குறிப்பாக சமஸ்கிருத ஆதரவு மடங்களான சங்கர மடங்களின் நிதி உதவி, அங்கீகாரம் இவற்றை தங்கள் செயல்களுக்கு பெறுவது என்பதே அந்த சூழ்ச்சி திட்டம்.
சிருங்கேரி மடத்தின் சார்பில் அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைகழகத்தில் (டாக்டர் ஷெல்டன் போலாக் பணிபுரியும் இடம்) ஒரு இருக்கையை ஏற்படுத்தியது. அதன்மூலம் சமஸ்கிருத மொழி ஆய்வு, ஹிந்து மதநூல்களை ஆராய்ந்து வெளியிடுவது என்பது அந்த திட்டம். சிருங்கேரி மடத்தின் அதிகாரபூர்வமான அமைப்பாக, கிளையாக இதை அறிவிக்க செய்வது நோக்கம்.
அதாவது, இந்தியர்களின் நிதியுதவியுடன் பாரம்பரிய ஹிந்து மடங்களின் அகங்கீகாரத்துடன் இந்திய பண்பாட்டை பாரம்பரியத்தை அழிப்பது என்பதே அவர்களின் சூழ்ச்சி. அதற்கு அமெரிக்கா வாழ் சிருங்கேரி மடத்தின் ஆதரவாளர்களும் ‘நம்நாட்டு மொழியான சமஸ்கிருதம் நமக்கு தெரியவில்லை. மாறாக அமெரிக்கர்கள் நன்கு கற்றுள்ளனரே’ என்று தாழ்வுணர்ச்சியும் குற்றவுணர்ச்சியும் கொண்ட இந்தியர்களும் இந்த சூழ்ச்சிக்கு இரையாயினர்.
நல்லவேளையாக ராஜீவ் மல்கோத்ரா, ரமா சங்கர், டாக்டர் சுப்ரமணிய சாமி போன்ற விஷயம் தெரிந்தவர்களின் முயற்சியால் மேற்கண்ட சூழ்ச்சி தடைபட்டுள்ளது.
இந்திய தேசியம் என்ற கருத்திற்கும் பாரத பண்பாட்டிற்கும் எதிரான சக்திகள் வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் தீவிரமாக செயல்படுகின்றன. சிலபல உள்நாட்டிலும் தீவிரமாக செயல்படுகின்றன. சிலபல இந்தியர்கள் அறியாமையால் எதிரிகளுக்கு ஆதரவாக இங்கு வாள் வீசிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பான்மையானோர் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்போதாவது இந்தியர்கள் விழித்துக் கொள்வார்களா? டூ