மூன்று இருந்தால் முடிவைத்தானேந்தல் தான்!

அன்புடையீர், வணக்கம்

தூத்துக்குடி அருகே முடிவைத்தானேந்தல் என்ற கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒருவர் ராணுவத்தில் பணிபுரிபவராக இருக்கிறார்கள். முன்பெல்லாம் இதுபோன்று பல கிராமங்கள் இருந்தன. ஆனால் இப்போது பெருவாரியான இளைஞர்கள் பட்டப்படிப்பு படித்து ஏதாவது வேலை தேடுபவர்களாக இருக்கிறார்கள். ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் குறைவாகவே இருக்கிறார்கள்.

அதற்கு முதல் காரணம் ஹிந்து குடும்பங்களில் ஒன்றோ இரண்டோ குழந்தைகளுடன் நிறுத்தி விடுகிறார்கள். முஸ்லிம், கிறிஸ்தவர்கள் யாரும் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதில்லை. ஹிந்துக்கள் மட்டுமே குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்கின்றனர். ஒரு குழந்தை உள்ள குடும்பத்தில் பெற்றோர்கள் யாரும் தனது மகனை ராணுவத்திற்கு அனுப்ப விரும்பவதில்லை. இந்த நிலை நீடித்தால் ராணுவத்தில் ஹிந்துக்களின் எண்ணிக்கை குறைந்து விடும். இது ஆபத்தானது. ஒவ்வொரு ஹிந்து வீட்டிலும் ௩ குழந்தைகளாவது இருக்க வேண்டும். ஒரு குழந்தையை ராணுவத்திற்கோ, போலீஸிற்கோ, ஹிந்து சமுதாய தொண்டு காரியங்களுக்கோ அப்போழுதுதான் அனுப்பமுடியும்.

இது போன்ற பிரச்சினைகள் ஹிந்துக்களுக்குப் புரியவேண்டும். விஜயபாரதம் வார இதழ் அத்தகைய ஹிந்து விழிப்புணர்வை உருவாக்கி வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏராளமானவர்கள் விஜயபாரதம் சந்தாதாரர் ஆகச் சேர்ந்தனர். அவர்களின் சந்தாவை புதுப்பித்துக் கொள்ள வேண்டுகிறேன்.

அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு விஜயபாரத சந்தாதாரரும் தமது உறவினர்கள், நண்பர்கள் சிலரை விஜயபாரதம் சந்ததாரர் ஆகச் சேர்த்துத் தரும்படி அன்புடன் வேண்டுகிறேன்.