மாமனிதரின் மானுடம்

வெளிப்புற பார்வைக்கு அம்பேத்கர் கடுமையாக தோற்றமளிப்பார். உள்ளத்தளவில் அவர் மென்மையானவர் என்பதற்கு சில உதாரணங்கள் உண்டு. அவருடைய நாய் காய்ச்சலாக இருந்தபோது, அது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அது இறந்தபொழுது, அவர் குழந்தையைப் போல அழுதார்.

ஒருமுறை, ஒரு பெண் நடு இரவு ௨ மணிக்கு அம்பேத்கரை சந்தித்து தன்னுடைய சோகக் கதையைக் கூறினார். அவருடைய கணவர் கடும் காய்ச்லுடன் இருந்தபோதும், மருத்துவமனை நிர்வாகத்தினர் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர். உடனே, அம்பேத்கர் அந்தப் பெண்ணை தன்னுடைய காரில் அழைத்துக் கொண்டு, மருத்துவமனைக்கு சென்று மருத்தவர்களிடம் பேசி, அவர் கணவரை அங்கே
சேர்க்கச் செய்தார்.

அம்பேத்கர் குடும்ப உறுப்பினர்கள் கிராமத்திற்கு சென்றிருந்தனர். அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்  வேறு ஒரு கிராமத்திலிருந்து இரு நபர்கள் பம்பாய்க்கு வேறு ஒரு வேலையாக வந்தவர்கள். அவருடைய ஆலோசனை பெற வந்தவர்கள், அவருடைய வீட்டிலேயே இரவு தங்க அனுமதி வேண்டினர். அம்பேத்கர் அவர்களை தன் வீட்டுக்குள் வரவேற்றார். மறுநாள் காலையில், அவர் நீதிமன்றம் செல்லும் முன் அவர்களுக்கு உணவளித்தார். மாலையிலும் அவர்கள் வேலை முடித்து வீடு திரும்பும் போதுகூட, அவர் தானே தயாரித்த உணவுடன் அவர்களுக்காக காத்திருந்தார். படித்தவராயிருப்பினும் அம்பேத்கரிடம் சிறிதளவும்கூட தற்பெருமையில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *