மமதாவிற்கு இருக்கிறதா சகிப்புத்தன்மை?

ம்ம் என்றால் சிறைவாசம். ஏனென்றால் வனவாசம். இது அந்நிய ஏகாதிபத்திய ஆட்சியிம்போது விடுதலை போராட்ட வீரர்களுக்கு ஏற்பட்ட அனுபவம். அதற்கு நிகரான ஏன் அதைவிட கொடுமையான ஒரு அனுபவத்தை மேற்குவங்க பாஜகவினர் தற்போது சந்தித்து வருகின்றனர். பொதுவாக நாடுமுழுவதும் பாஜகவினர் வந்தேமாதரம், பாரத்மாதா கீ ஜே, ஜெய் ஸ்ரீராம் போன்ற கோஷங்களை எழுப்பி வருகின்றனர். ஆனால் இந்த கோஷங்களின் பிறப்பிடமே மேற்கு வங்கம்தான். விடுதலை போராட்டத்தில் வந்தேமாதரத்தை தந்த பங்கிம் சந்திர சட்டர்ஜியும் மேற்கு வங்கத்தினரே. தற்போது மேற்கு வங்கத்தை ஆண்டு வரும் ஆளும் திருணமூல் காங்கிரஸின் தலைவி மமதாவிற்கு வந்தேமாதரமும் பிடிக்கவில்லை. பாரத் மாதா கீ ஜே, ஜெய் ஸ்ரீராம் கோஷமும் பிடிக்கவில்லை. ஆளும் வர்க்கத்திற்கு ஜிந்தாபாத் கோஷமிட்டு தனிநபர் துதிபாடி பழகிப்போன இவர்களுக்கு தேசத்தின் முன்னுதாரண புருஷர்களை வாழ்த்தி கோஷமிடுவது எரிச்சலை ஏற்படுத்துவது இயல்புதான்.

நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் எல்லையில்லா அவரது அடக்குமுறையையும் மீறி நடந்த பாராளுமன்றத் தேர்தலில் மேற்குவங்க வாக்காளர்கள் திருணமூல் காங்கிரஸின் கனவில் மண்ணை அள்ளி போட்டு அவர்களுக்கு இணையான பாஜகவின் வாக்கு சதவீதத்தை 16 லிருந்து 40.3 என்ற அளவிற்கு உயர்த்தியதோடு பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 2 லிருந்து 18 ஆக உயர்த்தியது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின் எதிர்கொள்ளவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஆட்சியைத் தக்கவைக்க எமனாக வந்து நிற்கும் பாஜகவை பார்த்து வெலவெலத்து போனதோடு எதைத்தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் பைத்தியக்காரி போல் புத்தி பேதலித்து அலைகின்றார் மமதா. அதனால்தான் அவர் செல்லுமிடங்களிலெல்லாம் பாஜக தொண்டர்கள் உற்சாக மிகுதியில் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷமிடும் நிலையில் காரை நிறுத்தி கீழறங்கி கோஷமிட்ட பார்த்து இது குஜராத் இல்லை, வங்காளம் இங்கு வகுப்புவாத சக்திகளுக்கு இடமில்லை, உங்களையெல்லாம் ஒழித்துவிடுவேன் என்றெல்லாம் ஒரு தெருவில் சண்டையிடும் நபரைப் போல நடந்துகொண்டுள்ளார். தனது பாதுகாப்பு அலுவலர்களை அழைத்து இவர்களையெல்லாம் குறித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி அவர் சென்றபிறகு அவர்கள் மீது தேவையில்லாத பிரிவுகளில் கொலைமுயற்சி வழக்கு பதிந்து சிறையில் அடைத்து வருகின்றனர். இச்சம்பவங்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக அரங்கேறி வருகிறது. ஒரு மாநில முதல்வரே கீழ்த்தரமான நிலைக்கு இறங்கி எதிர்கட்சியினர் மீது அல்சேஷன் நாய்போன்று பாய்ந்து பிடுங்குவாரென்றால் அவரது கட்சித் தொ(கு)ண்டர்கள் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதை உங்களது கற்பனைக்கே விட்டுவிடுகிறோம். எற்கனவே நாடாளுமன்றத் தேர்தலின்போது நடைபெற்ற கலவரங்களில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் படுகொலை செய்யப்பட்டதும் ஓராண்டுக்கு முன்பு நடைபெற்ற உள்ளூர் பஞ்சாயத்து தேர்தலின்போது நடைபெற்ற வன்முறைகளில் பலநூறு பேர் கொல்லப்பட்டதும் நினைவிருக்கலாம். ஒரு வருடத்திற்கு முன்பு நாடு முழுவதிலும் உள்ள எதிர்கட்சிகளெல்லாம் ஒன்றிணைந்து பாஜக தலைமையிலான மத்திய அரசிற்கு சகிப்புத்தன்மை இல்லை என்றெல்லாம் பொய் பிரச்சாரத்தை தொடர்ந்தார்கள். இப்போது அன்புச் சகோதரி மமதாவிடம் அந்தக் கேள்வியை கேட்கலாமே? எங்கே அந்த எதிர்கட்சிகள்? ஊடகங்கள்? நடுநிலை அரசியல் நக்கிகள்?

நாடாளுமன்றத் தேர்தல் முடிவிற்குப் பின்பு அவரது கட்சியின் நான்கு எம்.எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியின் ஒரு எம்எல்ஏ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ. உள்ளிட்ட ஆறுபேர் பாஜகவில் இணைந்துவிட்டனர். மேலும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அறுபதுக்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊராட்சி கவுன்சிலர்களும் முக்கிய அரசியல் கட்சி பிரமுகர்களும் மமதாவின் அராஜக ஆட்சியை எதிர்‌க்க சரியான தேர்வு பாஜகவே என்று முடிவெடுத்து பாஜகவில் இணைந்து வருகின்றனர். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தை பாஜக கைப்பற்றுவதோடு அராஜக கொடுங்கோல் மமதாவின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.