மதமாற்றும் முயற்சி முறியடிப்பு

நாகைமாவட்டம் வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள, கள்ளிமேடு பத்ர காளியம்மன் கோவிலில் உள்ள அம்மனை பல ஆண்டுகளாக   அனைத்து சமுதாய மக்களும்  தங்கு தடையின்றி வழிபட்டு  வருகின்றனர்.

இந்தநிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக, திருவிழா மண்டகப்படி சம்பந்தமாக  இந்து அறநிலையதுறையுடன் அப்பகுதி மக்களுக்கு பிரச்சினை இருந்து வருகிறது.kallimedu

கோயில் திருவிழா மண்டகப்படி  பிரச்சினையை தீர்த்துவைக்க இந்து அறநிலையத்துறை அலட்சியம் காட்டி வந்த காரணத்தால்  தீண்டாமை பிரச்சினைபோல் உருவெடுத்து மதமாற்ற சக்திகள் கிராமத்தில் ஊடுருவ வழிவகுத்திருக்கிறது.

இந்தநிலையில் இந்துமுன்னணி மாநில அமைப்பாளர் க.பக்தவத்சலன் தலைமையில் ஹிந்து முன்னணியினர் பழங்கள்ளிமேடு மக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்களை சந்தித்து உண்மை நிலவரத்தை கேட்டறிந்து, ஹிந்து ஒற்றுமையின் அவசியம் பற்றி கலந்துரையாடினர்.

மன்னார்குடி ஸ்ரீசெண்டு அலங்கார சம்பத் குமார ஜீயர் சுவாமிகள் இக்கிராம  மக்களை சந்தித்து, ஆறுதல்படுத்தி, லட்சுமி ஹோமம் செய்து நாம் அனைவரும் ஹிந்துக்களே என்று கூறி அருளுரை வழங்கினார்.

ஹிந்து சமுதாயத்தினரிடம் பிரிவினையை ஏற்படுத்தி அதில் ஆதாயம் பெற சில பிரிவினைவாத சக்திகள் வேலை செய்துவருவதை பழங்கள்ளிமேடு ஹிந்துக்கள் புரிந்துகொண்டுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *