மகளிர் மாதவம் புரிவதற்கென்றே ஒரு மாதம் மார்கழி!

வைகுண்ட ஏகாதசி: டிசம்பர் 21

ஆருத்ரா தரிசனம்: டிசம்பர் 26

மகளிர் மாதவம் புரிவதற்கென்றே ஒரு மாதம் மார்கழி!

 

திருவாதவூரில் மாணிக்கவாசகரும் ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாளும் அவதரித்தார்கள். இருவர் வாழ்க்கையும் ஆன்மா கடைத்தேறல் வகையில் அமைந்தவை. ஆண்டாள் திருவரங்கப் பெருமானுடனும், மாணிக்கவாசகர் திருக்கூத்தனுடனும் இரண்டறக் கலந்தார்கள். திருப்பாவைப் பெண்கள் கண்ணனையே கணவனாகப் பெற நோன்பு நோற்றார்கள். திருவெம்பாவை பெண்கள் சிவனருட் செல்வங்களே கணவனாகப் பெற வேண்டினார்கள்.   மழை வேண்டி ‘ஆழிமழைக் கண்ணா’ என ஆண்டாள் பாட, ‘முன்னிக் கடலை சுருக்கி’ எனப்பாடுகிறார் மாணிக்கவாசகர். திருப்பாவை தொடக்கம் ‘மார்கழித் திங்கள்’ என்பது. திருவெம்பாவையின் இறுதி ‘மார்கழி நீர் ஆடேலோர் எம்பாவாய்’ என்பது. சைவ- வைணவ ஒற்றுமையை உணர்த்தும் பாடல்கள் திருவெம்பாவையும் திருப்பாவையும்.

மார்கழி மாதம்

pic_page18,19_1 டிசம்பர் 17 வியாழக்கிழமை அன்று மார்கழி மாதம் பிறக்கிறது. இது மனிதனை உயர்வழிக்கு அழைத்துச் செல்லும் மாதம். மார்கழி என்பது எண்ணற்ற மகத்துவங்கள் நிறைந்த ஒரு அற்புதமான மாதம். கிருஷ்ண பரமாத்மா மந்திரங்களில் காயத்ரியாகவும், மாதங்களில் மார்கழியாகவும் இருக்கிறேன் என்று கூறுகிறார்.   மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாள் திருப்பாவை பாடுவதும், மாணிக்கவாசகரின் திருவெம்பாவை பாடுவதும் விசேஷமானது.   மார்கழி மாதம் சிதம்பரத்தில் ஆருத்ராவும் ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசியும் விசேஷமானது.

மார்கழி மூல நட்சத்திரத்தில் ஹனுமன் ஜெயந்தியும் வருகிறது. மார்கழி மாதம் முழுவதும் வீட்டுவாசலில் கோலம் போட்டால் மகாலட்சுமி வீடு தேடிவருவாள் என்பது நம்பிக்கை.

திருப்பாவை

ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆடிப்பூர நாளில் அவதரித்த ஆண்டாள், பெரியாழ்வார் திருமகளாக வளர்கிறார். ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாடல்களும் சங்கத் தமிழ் மாலை என்று போற்றப்படுகின்றன. மார்கழி மாதத்தில் திருப்பாவை பாடுவது மிகவும் விசேஷமானது. பெண்கள் பாவை நோன்பு இருப்பார்கள். திருப்பதி வெங்கடேசப் பெருமாள் முன்பு அதிகாலையில் பாடப்படும் சுப்ரபாதத்திற்கு பதிலாக மார்கழி மாதம் முழுவதும் ஆண்டாள் பாசுரமான திருப்பாவைப் பாடல்கள்தான் ஓதப்படும்.

திருவெம்பாவை

திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகரால் திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் திகழும் சிவபெருமானை முன்னிலைப்படுத்தி பாடப்பட்டது. கன்னிப்பெண்கள் அதிகாலையில் துயில் எழுந்து ஒருவரை ஒருவர் எழுப்பி, சிவ வழிபாட்டிற்குச் செல்வதுபோல திருவெம்பாவை அமைந்துள்ளது. திருத்தொண்டு புரிவதையே வரமாகக் கேட்கிறது திருவெம்பாவை. திருப்பள்ளியெழுச்சி பாடல்கள் பத்தும் திருப்பெருந்துறையில் உள்ள ஆவுடையார் கோயில் சிவனை பள்ளி எழுப்பும் வகையில் அமைந்துள்ளன.

வைகுண்ட ஏகாதசி

pic_page18,19_4ருடம் முழுவதும் ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்க முடியாதவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசிக்கு விரதம் இருந்தால் ஆண்டு முழுவதும் விரதம் இருந்த பலன் கிடைக்கும். மார்கழிமாதம் வளர்பிறை ஏகாதசிதான், வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்றுதான் ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. காலப்போக்கில் வைணவக் கோயில்கள் அனைத்திலும் சொர்க்கவாசல் திறப்பது ஒரு திருவிழாவாகவும் நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசியன்றுதான் அர்ஜுனனுக்கு கீதையை உபதேசம் செய்தார் கிருஷ்ண பரமாத்மா. எனவே இந்த நாளை கீதாஜெயந்தி எனக் கொண்டாடுகின்றனர்.

ஆருத்ரா தரிசனம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தின்போது நடராஜர் நடனகோலத்தில் காட்சியளிப்பது ஆருத்ரா தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த தினத்தில் தில்லை நடராஜரின் திருநடனத்தை காண்பதற்கு கண் கோடி வேண்டும்.   சிலம்பரசாக வந்த சிவபெருமானுக்கு சேந்தனார் எனும் பெருமானார் பக்தியுடன் களி தயாரித்து கொடுத்தார். அதனால் திருவாதிரை நாளில் நடராஜபெருமானுக்கு களியமுது படைக்கும் பழக்கம் உண்டாயிற்று. திருவாதிரைக்கு ஒரு வாய்க்களி என்பது பழமொழி, திருவாதிரை அன்று விரதம் இருப்பவர்கள் அன்று ஒரு வாய்க் களி உண்டு மகிழ்கின்றனர். விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்தால் அன்றைய தினம் நம் வானவெளியில் திருவாதிரை நட்சத்திர மண்டல விண்மீன்கள், பூமி, நிலவு ஒரு கோட்டில் தன் சஞ்சாரத்தின் போது நிற்கும், இது வடகிழக்கு திசையில் நிகழும்.     இந்த ஆதிரைத் திருநாளன்றுதான் 1829ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 29ம் நாள் இரவு ஒருமணிக்கு ரமண மகரிஷி பிறந்தார்.