பரதன் பதில்கள்

வால்மீகி  உயர்ந்தவரா?  கம்பன்  உயர்ந்தவரா?       

– இராம. சுப்புரத்தினம், புதுக்கோட்டை

அப்பா, அம்மா இதில் யார் உசத்தி என்று கேட்டால் என்ன சொல்வது? வால்மீகியால்தான் கம்பர் பெருமை பெற்றார். பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரால் சுவாமி விவேகானந்தர் பெருமை பெற்றார். இப்படிச் சொல்வதால் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை.

 

சில  மாதங்களில்  ஒரே  நட்சத்திரம்  இரண்டு  முறை  வருகிறது.  அந்த  மாதம்  பிறந்தநாள் வரும்  நிலையில்  ஜன்ம  நட்சத்திரமாக  எதை  எடுத்துக் கொள்வது?       

– சுபா ரவி, காஞ்சிபுரம்

இரண்டாவதாக வரும் நட்சத்திரத்தையே எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிறார் விஜயபாரத ஆஸ்தான ஜோதிடர்.

       

சபரிமலை  செல்லும்  பக்தர்களின்  எண்ணிக்கை  அதிகரித்து  வருகிறதே. ஏன்?       

– வே. ராகவ், தொண்டி

எனது நண்பர் ஒருவர் கல்லூரி பேராசிரியர். திருமணமாகி 5 ஆண்டுகள் குழந்தை இல்லை. சபரிமலை சென்று ஐயப்பனை பிரார்த்தித்து வந்தார். மகன் பிறந்தான். இதுபோல்  ஐயப்பனின்  திருவருள்  பெற்றோர்  ஏராளம்.

 

ஆர்.எஸ்.எஸ்   ஜாதியை ஆதரிக்கிறதா?     

– வி. சந்திரசேகர், கோவை

இல்லை. அமைப்பில் யார் என்ன ஜாதி என்று கேட்பதும் இல்லை… சொல்வதும் இல்லை. ‘ஹிந்து’ என்ற ஒரு சொல்தான் தாரகமந்திரம். அதுமட்டுமல்ல, தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். உறுதியாக விரும்புகிறது. ஜாதியை ஒழிப்போம் என்று சிலர் சொல்வது ஏமாற்று வேலை. ஜாதியின் பெயரால் ஏற்றத்தாழ்வு கூடாது என்பதுதான் யதார்த்தம்.

 

மன்னார்குடி  சசிகலா  குடும்பம்  மீது  நடந்த  ரெய்டு  பற்றி?     

– மோனிஷா, தருமபுரி

பொதுமக்கள் பாராட்டுகிறார்கள். எதிர்ப்பவர்கள் பிஸ்கட்டுக்கு வாலாட்டுகிறார்கள்.

 

வை.கோ.  குடும்பமே  கிறிஸ்தவர்களாக  மதம்  மாறியது  பற்றி?       

– சா. கலையரசன், தூத்துக்குடி

வை.கோ. கருப்புத் துண்டு அணிந்து பகுத்தறிவு பேசிவந்த திராவிட இயக்க தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர். அவர் குடும்பத்தையே கிறிஸ்தவம் பதம் பார்த்தது என்று சொன்னால் பாமர குப்பனும்   சுப்பனும்   எம்மாத்திரம்?

 

பிரதமர்  மோடியின்  தனிச்  சிறப்பென்ன?       

– வி. ராகுல், தாம்பரம்

ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி சோனியா, லல்லு, முலாயம், கருணாநிதி, சசிகலா குடும்பங்கள் கோடி கோடியாய் கொள்ளையடித்து சொத்துக்களைக் குவித்தார்கள். 12 வருஷம் குஜராத் முதல்வராக இருந்தவரும் 3 வருஷம் பிரதமராகவும் இருக்கிற நரேந்திர மோடி, குடும்ப உறுப்பினர் ஒருவரைக் கூட அருகில் சேர்க்கவில்லை. பிரதமரின் அம்மா ஒரு சிறிய வீட்டில் இருக்கிறார். உடல் நலம் சரியில்லை என்றால் ஆட்டோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று வருகிறார்.