‘ஆசையே துன்பத்திற்குக் காரணம்’ என்ற புத்தர் வாக்கை ஒருவன் மேற்கொண்டால் அவன் முன்னேறுவது எப்படி?
– வே. சங்கர நாராயணன், திருநெல்வேலி
ஒரு ஆசிரியர் பேராசிரியராக வர ஆசைப்படலாம். ஒரு சின்ன டீக்கடை வைத்திருப்பவர் பெரிய ஹோட்டல் வைக்க ஆசைப்படலாம். சாதாரண ஒரு தொழிலாளி முதலாளியாக ஆசைப்படலாம். இதெல்லாம் தவறில்லை. நல்ல உத்தியோகத்தில் இருப்பவர் லஞ்சம் வாங்கி மாடி மேல் மாடி கட்டும் முறைதவறிய ஆசைகளையே புத்தர் குறிப்பிடுகிறார்.
நாத்திகர்கள் ஹிந்து மதத்தை மட்டுமே விமர்சிக்கிறார்களே?
– பி.கனகராஜன், வடக்குப்பட்டு
ஹிந்து மதத்தை மட்டுமே விமர்சிக்கிறவர்கள் நாத்திகர்கள் அல்ல. அவர்கள் அயோக்கியர்கள்.
சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கலாம் என கேரள அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது பற்றி?
– சோம. அழகப்பன், கோட்டையூர்
கேரளத்தில் இப்போது நடைபெறுவது கம்யூனிஸ்ட் அரசு. அது ‘மதம்’ ஓர் அபின் என்ற கொள்கையை உடையது. மதத்திலேயே நம்பிக்கை இல்லாத ஒரு கட்சி ஹிந்து மத விஷயத்தில் மட்டும் தலையிடலாமா? இன்றும் மசூதிகளில் பெண்களை அனுமதிப்பதில்லையே. இது விஷயத்தில் தலையிட கம்யூனிஸ்டுக்கு முதுகெலும்பு உண்டா?
‘எம்மதமும் சம்மதம்’ என்பது உயர்ந்த கோட்பாடு தானே?
– சி. சுடர்க்கொடி, கொளத்தூர்
ஆம். நிச்சயம் உயர்ந்த கோட்பாடுதான். இதை நம்மைப் போல ஏமாளி ஹிந்துக்கள் மட்டுமே சொல்லி வருகிறோம். முஸ்லிம், கிறிஸ்தவர்கள் இதை ஏற்றுக் கொள்வதில்லை. தங்களுடைய கடவுள் மட்டுமே உண்மையானவர்கள் என்று சொல்கிறார்கள். அதனால் நாமும் ஹிந்து மதமே நமக்கு சம்மதம் என்று முழங்கவேண்டும்.
* அமெரிக்க அதிபராக ‘டிரம்ப்’ வெற்றி பெற்றது பற்றி ?
– சாந்தி சுந்தர், மறைமலைநகர்
இந்தியாவில் மோடி நல்லாட்சி நடத்துவதுபோல் நானும் ஆட்சி செய்வேன் என்று பேசியவர் டிரம்ப். இந்தியாவிற்கும் ஹிந்துக்களுக்கும் நண்பனாக இருக்கப் போகிறேன்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவுடனான வர்த்தகம், தொழில் விஷயங்களில் பெரிய மாற்றம் இருக்காது.
* நான் ஒரு ஹிந்து. ஒரு கிறிஸ்தவப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வது பற்றி உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்?
– கே. மணிமாறன், பேரளம்
அந்தப் பெண்ணை ஹிந்துவாக மாற்றி திருமணம் செய்து கொள்ளுங்கள். எச்சரிக்கை..
தடுமாறி விடாதீர்கள்.
சமீப காலங்களில் தீபாவளி நேரத்தில் ்பட்டாசு இல்லாத தீபாவளி’ என்ற முழக்கம் ஓங்கி ஒலிக்கிறதே?
– சரண்யா மகேஷ், காஞ்சிபுரம்
தீபாவளிப் பண்டிகையின் முக்கியத்துவத்தைக் குறைக்க கிறிஸ்தவ மிஷனரிகள் செய்யும் சதித்திட்டம். தீபாவளி அன்று மது விற்பனை ரூ.360 கோடி. இது கடந்த ஆண்டை விட ரூ.25 கோடி அதிகம். மது பற்றி வாய் திறக்க யோக்கியதை இல்லாதவர்கள் பட்டாசு பற்றி விமர்சிப்பது கேவலம்.
* குறியிட்ட கேள்விகளுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.