7வது ஊதியக் குழுவின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு ஊழியர்களுக்கு 23.55 சதவீத ஊதிய உயர்வு அளித்திருக்கிறது மத்திய அரசு. ஜூன் 29ல் அறிவிக்கப்பட்ட இந்த ஊதிய உயர்வு போதாது என்று கூறி, வரும் ஜூலை 11 முதல் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக சில மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் எச்சரித்துள்ளன. (பி.எம்.எஸ். இந்த வேலைநிறுத்தத்தில் சேரப்போவதில்லை என்று அறிவித்துள்ளது) இந்நிலையில், ஊதிய உயர்வு குறித்த சிந்தனைகள் தவிர்க்க இயலாதவை ஆகின்றன.
அரசு ஊழியரின் நிச்சயமாக சமுதாயத்திலும் எதிரொலிக்கிறது. இதே விகிதாசாரத்தில் இல்லையென்றாலும், சமுதாயத்தில் உள்ள பிறரின் ஊதியமும் சிறுகச் சிறுக உயர்கிறது. மக்களின் வாங்கும் சக்தி உயர்வே பொருளாதாரத்தின் அளவுகோலாகக் கொள்ளப்படும் நிலையில், ஊதிய உயர்வு தவிர்க்க இயலாதது.
அதே சமயம், பணவீக்கத்துக்கும் விலைவாசி உயர்வுக்கும் அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு காரணமாகிறது. வளர்ச்சிக்கும் வீக்கத்துக்கும் இடையிலான மெல்லிய வித்தியாசத்தை இதுபோன்ற தருணங்களில் தான் உணர முடியும். இயல்பான வளர்ச்சி என்பது உடலின் அனைத்து அவயங்களும் சீராக வளர்வது போன்றதாகும். அதேசமயம், தலை மட்டும் வளர்ந்து பெரிதாகி, உடல் சிறுத்தால் அது வியாதியின் அறிகுறியாகவே கொள்ளப்படும். அத்தகைய நிலைமை தான் ஒவ்வொரு முறை அரசு ஊழியர்களின் ஊதியங்கள் உயர்த்தப்படும் போதும் உருவாகிறது.
இப்போது மத்திய அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வால் அதன் ஊழியர்கள் சுமார் ஒரு கோடிப் பேர் பயனடைவார்கள். இவர்களில் தற்போது பணியில் உள்ளவர்கள் 47 லட்சம் பேரும், பணி ஓவு பெற்ற 53 லட்சம் பேரும் (ஓவூதியம்) பயன் பெறுவார்கள். இவர்களில் 14 லட்சம் பாதுகாப்புப் படையினரும், 18 லட்சம் ஓவு பெற்ற ராணுவத்தினரும் அடக்கம்.
மத்திய அரசு ஊழியரின் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 7,000-லிருந்து ரூ. 18,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, அதிகபட்ச ஊதியம் ரூ. 90,000-லிருந்து ரூ. 2.5 லட்சமாகி உள்ளது. இந்த ஊதிய உயர்வு தான் போதுமானதில்லை என்று அரசு ஊழியர் சங்கங்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன. குறிப்பாக, குறைந்தபட்ச ஊதியத்தை ரூ. 26,000 ஆக உயர்த்த வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.
தவிர, ராணுவ வீரர்களின் ஆரம்பநிலை ஊதியம் ரூ. 21,700 (முதலில் ரூ. 8,460) ஆகவும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் ஆரம்பநிலை ஊதியம் ரூ. 56,000 (முதலில் ரூ. 23,000) ஆகவும் குறைந்தபட்ச ஓவூதியம் ரூ. 9,000 (முதலில் ரூ. 3,500) ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் ஏற்கப்பட்ட முக்கியமான சில அம்சங்கள் பணிக்கொடை (கிராஜுவிட்டி), வீட்டுக்கடன் உயர்வு ஆகியவை. பணிக்கொடையின் உச்ச வரம்பு ரூ. 20 லட்சமாக (முதலில் 10 லட்சம்), வீட்டுக்கடன் வரம்பு ரூ. 25 லட்சம் (முதலில் ரூ. 7.5 லட்சம்) என அதிகரிக்கப்பட்டுள்ளது.
நியாயமில்லாத கோரிக்கைகள்
மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் சற்றும் நியாயமற்றவை என்பது, மேற்கண்ட புள்ளிவிவரங்களைக் காணும்போதே தெரியும். அரசை நடத்துபவர்களாக இருப்பதாலேயே, வேலைநிறுத்த மிரட்டல் மூலம் அரசைப் பணிய வைத்து ஊதியத்தை உயர்த்திக் கொள்ள அவர்கள் முற்படுவது சற்றும் நியாயமல்ல.
மத்திய அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு அறிவிப்பைத் தொடர்ந்து, இனிவரும் நாட்களில் மாநில அரசு ஊழியர்களும் ஊதிய உயர்வுக் கோரிக்கைகளை முன்வைப்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு மாநிலமும் அவர்களின் கோரிக்கைகளை ஏற்று ஊதிய உயர்வை அறிவிக்கத் தான் போகின்றன.
பெரும்பாலான ஆளும் கட்சிகள், அரசு ஊழியர்களை வாக்கு வங்கியாகவே பார்க்கின்றன. தவிர, வாக்குச்சாவடிகளிலும் அவர்களின் உதவி தேவையாக உள்ளது. மேலும் மக்களிடையே அரசு குறித்த பிம்பம் உருவாக்கக் காரணமாக இருப்பவர்கள் என்பதால், அவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவே அரசுகள் விரும்புகின்றன.
ஆறாவது ஊதியக் குழு மத்திய அரசிடம் 2003-ல் பரிந்துரைத்தது 20 சதவீத உயர்வே. ஆனால், அதை பரிசீலித்த முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 2008ல் 40 சதவீத ஊதிய உயர்வை அளித்தது. இதுபோன்ற சாகசங்கள் அரசின் சாதனையாகவே கூட விளம்பரப்படுத்தப்படுகின்றன. அதன் தொடர்ச்சியாகவே, இப்போது மத்திய அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வு போதுமானதல்ல என்று ஊழியர் சங்கங்கள் கூறுகின்றன.
அது மட்டுமல்ல, தற்போதைய மத்திய அரசுக்கு நிதிச் சிக்கலை ஏற்படுத்தவும் ஊழியர்களிடையே அதிருப்தியை உருவாக்கவும், ஊதிய உயர்வு விஷயத்தை ஒரு கருவியாக இடதுசாரி தொழிற்சங்கங்கள் பயன்படுத்துகின்றன. சாமானியனின் வாழ்க்கைநிலை தாழ்ந்துகொண்டிருக்கும்போது, தங்கள் தொழிற்சங்கங்களின் ஆதார உறுப்பினர்காளாக உள்ள அரசு ஊழியர்களின் தேவைகளை மட்டுமே நிறைவேற்ற அவை துடிக்கின்றன. நமது நாட்டில் இடதுசாரித் தொழிற்சங்கங்களின் வீழ்ச்சி இதில் தான் துவங்கியது; இன்றும் அது தொடர்கிறது.
அரசு ஊழியரின் குறைந்தபட்ச ஊதியத்தை விட ஐ.ஏ.எஸ். அதிகாரியின் ஊதியம் 3.12 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பது நியதி. அந்த அடிப்படையில் தான் ஊதிய உயர்வுப் பரிந்துரைகள் அளிக்கப்படுகின்றன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18,000-ஐ ரூ. 26,000 ஆக உயர்த்தினால், அதன் தொடர்ச்சியாக அனைத்து நிலை அலுவலர்களின் ஊதியமும் உயரும். அதன்மூலமாக தற்போதைய ஊதிய மதிப்பீடான ரூ. 1.21 லட்சம் கோடி என்பது இரு மடங்காக வாப்புள்ளது. இது நமது அரசுக்கு கூடுதல் சுமை மட்டுமல்ல, அந்த சுமையின் பாரம் பொதுமக்களின் மீதுதான் அழுத்தும்.
சிந்திக்கச் சிலநொடிகள்
இந்த நாட்டின் மக்கள் தொகை 130 கோடி. சுமார் 50 கோடி குடும்பங்கள் நாட்டில் உள்ளன. இவர்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓவூதியர்களின் எண்ணிக்கை ஒரு கோடி மட்டுமே. இந்த ஒரு கோடி மக்களின் ஊதிய உயர்வால் ஏற்படும் விலைவாசி உயர்வால் பாதிக்கப்படப் போவது மீதமுள்ள 49 கோடிப் பேர்.
பிறமாநில அரசுகளும் தங்கள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அளிக்கும் பட்சத்தில் அவர்களின் எண்ணிக்கை சுமாராக ஒரு கோடி இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. அவர்கள் மட்டும் விலைவாசி உயர்வாலும் பணவீக்கத்தாலும் பாதிக்கப்படாமல் தப்பக் கூடும். பிறரின் நிலைமை என்ன?
சாமானிய மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அளிக்கும் வரியினங்கள் மூலம் திரட்டப்படும் வருவாயிலிருந்துதான் ஊழியர்களுக்கு ஊதியமாகச் செலவிடப்படுகிறது. வரிப்பணத்தில் வாழ்பவர்கள் வசதியாக இருக்கும்போது, அதற்கான ஆதாரமாக இருக்கும் மக்கள் ஏழ்மையில் தவிப்பது ஏற்க இயலாத நெருடல். குறிப்பாக, நாட்டின் அடிப்படை ஆதாரமான விவசாயம் சார்ந்தவர்களின் வாழ்க்கைநிலை மிகவும் மோசமாக சரிந்துவரும் நிலையில், சமூகத்தின் உயர்நிலை மக்களாக அரசு ஊழியர்கள் பெற்றுவரும் பயன்கள் சற்றும் பொருந்தாததாகவே இருக்கும்.
நாட்டின் பாதுகாப்புக்காக இன்னுயிர் ஈந்திடச் சித்தமாக உள்ள ராணுவ வீரர்களின் ஊதியமும் ஓவூதியமும் குறித்து யாரும் கேள்வி எழுப்ப மாட்டார்கள். ஆனால், பிற அரசுத் துறைகளில் உள்ள ஊழியர்களின் வாழ்க்கை வசதிகள் வீங்கும்போது, சாமானிய மக்கள் பொருமவே செவர். இதை அரசு ஊழியர்கள் உணர வேண்டும்.
‘தோட்டத்தில் பாதி கிணறு’ என்ற பழமொழி உண்டு. அதுபோல, நாட்டின் செலவினத்தில் பெரும்பகுதியை ஊழியர் ஊதியமே ஆக்கிரமிப்பது, நாட்டின் வளர்ச்சிக்கு கண்டிப்பாக உதவாது.
சாதாரண அரசு அலுவலகத்தின் கடைநிலை உதவியாளர் பணியிடத்துக்கும் கூட ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பிக்கும் சூழலே, நமது சமுதாயத்தின் நிலையை தெளிவாகக் காட்டுகிறது. அரசுப் பணியாளர் தேர்வாணையங்களில் நிலவும் ஊழல்கள் அதன் அடுத்தகட்ட வளர்ச்சியே. இந்நிலையில் அரசு ஊழியர்களின் ஊதியம் மட்டும் உயர்ந்து கொண்டே போவது, சமுதாயத்தில் குழப்பத்தையே உருவாக்கும்.
தனியார் நிறுவனங்களில் பணிப் பாதுகாப்பு எவருக்கும் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. அரசு ஊழியர் அல்லாதவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஆனால், அரசு ஊழியர்களுக்கு அரசு உத்தேசித்துள்ள பங்கேற்பு ஓவூதியத் திட்டம் கடுமையாக நிராகரிக்கப்படுகிறது.
அரசு அலுவலகங்கள் கணினிமயமாக்கப்பட்டாலும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க தொழிற்சங்கங்கள் விடுவதில்லை. அதாவது, குறைந்த உழைப்பு, அதிக ஊதியம் என்பதே அவர்களின் இலக்காக இருக்கிறது. இத்தகைய முரண்பாடுகளால் தேச வளர்ச்சி சாத்தியமாகாது.
கவியரசு கண்ணதாசனின் நமக்கும் கீழே உள்ளவர் கோடி; நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு” என்ற பாடல் வரிகளே நினைவுக்கு வருகின்றன. அரசு ஊழியர்கள், தாங்கள் சமுதாயத்தின் ஓர் அங்கமே என்பதை முதலில் உணர வேண்டும். தாங்கள் தேவலோகத்தில் பிறப்பெடுத்த தனிப்பிறவிகள் அல்ல என்பதை அவர்கள் உணர்ந்தாலே, அவர்களின் நியாயமற்ற கோரிக்கைகள் எழாது.
இப்போதும், அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வை மக்கள் எதிர்க்கவில்லை. ஆனால், அரசு ஊழியர்கள் பேராசைப்பட்டு அரசை நிர்பந்திப்பது, தங்களின் தலையில் தாங்களே கொள்ளி வைப்பது போலாகிவிடும். தாங்கள் சமூகத்தின் சேவகர்களே என்பதை மனதில் இருத்தி, லஞ்ச, ஊழல் இல்லாத நிர்வாகத்தை அவர்கள் நடத்த அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இது மக்களின் விருப்பமல்ல; ஆணை. டூ
அச்சாணியின் கூர்மை!
எந்த அரசுக்கும் அச்சாணியாகத் திகழ்பவர்கள் தன் ஊழியர்கள். அவர்களைத் தான் நிர்வாக இயந்திரம் என்று கூறுகிறோம். நிர்வாக இயந்திரம் சரிவர இயங்காவிடில், நாட்டில் குழப்பமே மிஞ்சும். அதற்காகவே, மக்கள் வரிப்பணத்திலிருந்து அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. ஊழியர்களாக, மக்கள் திரளிலேயே தகுதி படைத்தவர்களான குறிப்பிட்ட சிலர் தேர்வு செயப்பட்டு பணி நியமனம் செயப்படுகிறார்கள். நிர்வாக இயந்திரம் சிறப்புற இயங்க வேண்டுமானால், அரசு ஊழியர்கள் வாழ்க்கை பற்றிய கவலையின்றி பணியில் ஈடுபட வேண்டும். அதற்காகவே, பத்தாண்டுகளுக்கு ஒருமுறை, அப்போதைய பொருளாதார சூழ்நிலையை அனுசரித்து அவர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது. இதற்கென ஊதியக் குழுக்கள் நியமிக்கப்பட்டு, அவற்றின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், தற்போது 7-வது ஊதியக் குழு அளித்த பரிந்துரைகள் தற்போது மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஜனவரி 1, 2016 என்ற முன்தேதியிட்டு அமலாக்கம் செயப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் மந்திரி மனைவி
பசு மாமிச ஏற்றுமதியாளர்
காங்கிரஸ் பிரமுகர் கபில் சிபில் மனைவி பிரமீளா. இவர் இறைச்சிக்காக பசுவதைக் கூடம் நடத்திவருவது அண்மையில் படத்துடன் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மிகப் பெரிய பசு மாமிச ஏற்றுமதியாளரான பிரமீளா தன் கம்பெனிக்கு ‘அரிஹந்த்’ என்று பெயரிட்டிருந்தார். ஜைன அமைப்பினர் எதிர்த்தார்கள். பெயரை மாற்ற மறுத்தார். கேஸ் போடுவோம் என்றார்கள். பெயரை மாற்றினார்.