செப்டம்பர் 11 வரலாறு படைத்த சுவாமிஜி

இந்து சமய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் செப்டம்பர் 11 1893.

ஆம் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நடைபெற்ற மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் இந்து மதத்தின் சார்பாக பேசி வரலாறு படைத்தார்.

இஸ்லாம் கிருத்துவம் பௌத்த மதங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட மாநாட்டில் பார்வையாளர்கள் சுமார் 5000 பேர் கலந்து கொண்டனர்.

சுவாமிஜி தனது உரையை துவங்கும் போது அமெரிக்க நாட்டின் சகோதரிகளே சகோதரர்களே என்று கூறியதும் 2 நிமிடம் மக்கள் கைதட்டி பலத்த ஆரவாரம் செய்தனர் இது பற்றி சிலர் குறிப்பிடும் போது சகோதரிகளே சகோதரர்களே என்று சுவாமிஜி தனது உரையைத் துவங்கியததால் தான் மக்கள் பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை ஏனென்றால் சுவாமிஜி பேசுவதற்கு முன்னும் பின்னும் பலர் சகோதர சகோதரிகளே என்று அழைத்ததுண்டு.

இதை பற்றி சுவாமிஜி குறிப்பிடுகிறார் சிகாகோவில் எனது முதல் சொற்பொழிவில் நான் எல்லோரையும் அமெரிக்க சகோதரிகளே சகோதரர்களே அழைத்ததும் எல்லோரும் எழுந்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்ததும் உங்களுக்கு தெரியும் ஆனால் அப்படி அவர்கள் பரவசப்பட்டனர். அதற்கு என்ன காரணம் தெரியுமா ஏதோ அதிசய ஆற்றல் என்னிடம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? உண்மைதான் என்னிடம் அதிசய ஆற்றல் உள்ளது அது இதுதான் ஒருமுறைகூட காம எண்ணம் என்னுள் போக நான் அனுமதித்ததில்லை உயர்ந்த போக்கில் போகுமாறு பயிற்சி அளித்தேன் அது யாராலும் தடுக்க முடியாத ஒரு மாபெரும் ஆற்றல் உருவெடுத்தது