திருப்பதியில் நடைபெறும் பிரம்மோற்சவத் திருவிழாவை முன்னிட்டு சென்னையிலிருந்து திருக்குடை ஊர்வலம் செப்டம்பர் 16ம் தேதி துவங்கியது. துவக்க விழா சென்ன கேசவ பெருமாள் கோயிலில் நடைபெற்றது. வட தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் எஸ். வாசுதேவன் தலைமை தாங்கினார். விழாவில் ஆசியுரையாக மன்னார்குடி ஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் ஸ்ரீ சம்பத் குமார ராமானுஜர் ஜீயர் ஆசியுரை வழங்கினார். மாநில அமைப்புச் செயலாளர் பி.எம். நாகராஜன், ஆர்.எஸ்.எஸ். சென்னை நகர தலைவர் கல்யாண்சிங், விஜயபாரதம் ஆசிரியர் ம. வீரபாகு, சென்னை காஞ்சி கோட்ட அமைப்பாளர் ராமன், ஜி ராமலிங்கம், ஏ. தணிகைவேல் (அறங்காவலர்கள்) உள்பட ஏராளமான நிர்வாகிகளும், பொதுமக்களும் தாய்மார்களும் கலந்துகொண்டனர். நான்கு நாட்கள் ஊர்வலமாகச் சென்று திருப்பதி சென்றடையும். ஊர்வலத்தில் 21 திருக்குடைகள் இடம்பெற்றன.
20ம் தேதி திருமலையில் திருக்குடைகளை விசுவ ஹிந்து பரிஷத் அகில உலகத் தலைவர்
ஜி. ராகவரெட்டி, அகில உலக துணைச் செயலாளர் ஒய். ராகவலு முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டது.