கொசு மருந்து அடித்து அவற்றை கொல்கிறேன் இறந்த கொசுக்களை எண்ணவா முடியும்

பிப்ரவரி புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக, இந்தியா பாலாகோட் பகுதியில்  உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது எதிரடித் தாக்குதல் நடத்தியது. அதில் இறந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கைப் பற்றி கேள்வி எழுப்பிய கசடர்களுக்கு பதிலடியாக அமைந்தது.    முன்னாள் ராணுவ தளபதியும் மத்திய இணையமைச்சருமான வி.கே.சிங் தனது டுவிட்டரில் எழுதியுள்ள வாசகம். அந்தக் கசடர்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள்!

பிப்ரவரி மாதம் 26ம் தேதி புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாலாகோட் தாக்குதலின் போது சுமார் 250க்கு மேற்பட்டவர்கள் மடிந்திருக்கலாம் என பா.ஜ.க. தலைவர் அமித் ஷா கூறியதற்கு,  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தாக்குதல் நடத்தியதற்கு சாட்சியங்கள் இருக்கின்றதா, ஆதாரம் என்ன என்ற கேள்வியை தொடர்ந்து எழுப்பி வருகிறார்.  மேலும் தாக்குதல் நடக்கவில்லை என பாகிஸ்தான் கூறும் பொய்யை தொடர்ந்து ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பேசி வருகிறார்கள்.  இதற்கு பதிலடியாக வி.கே. சிங், ‘‘இரவு நேரத்தில் அதிகமாக கொசு கடிக்கிறது,  அப்போது கொசு மருந்து அடித்து அவற்றை கொல்கிறோம்.  இறந்த கொசுக்களை எண்ணிப் பார்ப்பது முக்கியமா அல்லது நிம்மதியாக தூங்குவது முக்கியமா?” என்ற கேள்வியை எழுப்பி மடக்கினார்.  இந்தியாவிற்கு தொல்லை கொடுக்கும் பயங்கரவாத அமைப்பை அழிப்பது முக்கியமா அல்லது  தாக்குதல் நடத்திய போது சாட்சிகளை வைத்துக் கொண்டு தாக்குதல் நடத்த முடியுமா என்பதை கூட சிந்திக்க மறுக்கும் காங்கிரஸ் புள்ளிகளுக்கு இதுவும் வேண்டும். இன்னமும்… வேண்டும்.