இரு துருவ அரசியலுக்கு தலைசிறந்த உதாரணமாக திகழ்வது, கேரளா. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் மார்க்ஸிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணியும் மாறிமாறி கேரளாவில் ஆட்சி நடத்தி வருகின்றன. மூன்றாவது சக்தி கேரளாவில் விஸ்வரூபம் எடுக்குமா என்ற ஏக்கம் இளைஞர்களிடையே மேலோங்கியுள்ளது.
யுவசக்தியின் நம்பிக்கை நட்சத்திரமாக மாநில பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரன் உருவெடுத்துள்ளார். வட முனையில் உள்ள காசர்கோட்டிலிருந்து தென் முனையில் உள்ள திருவனந்தபுரம் வரை அவர் நடத்திய விமோசன யாத்திரை, மே மாதம் 16ம் தேதி நடைபெறும் கேரள சட்டசபை தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் சார்பில் யாத்திரை நடத்திய சுதீரனும், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் யாத்திரை நடத்திய பிணராயி விஜயனும் வெற்று நாற்காலிகளைப் பார்த்தே உரையாற்றவேண்டிய நிலை காணப்பட்டது. ஆனால், கும்மணம் ராஜசேகரனுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு கிட்டியது. இதை பாஜகவினர் மட்டுமல்லாமல் நடுநிலையாளர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.
அன்னம், நிலம், நீர், வேலைவாய்ப்பு, சமநீதி என்ற ஐந்து அம்சங்களை முதன்மைப்படுத்தி கும்மணம் ராஜசேகரன் நடத்திய விமோசன யாத்திரை, கேரள மக்களின் பிரச்சினைகளை மையப்படுத்தியதுடன் அவற்றுக்கு தீர்வு காணவேண்டிய வழிகளையும் முதன்மைப் படுத்தியுள்ளது.
விமோசன யாத்திரை, வெறும் அரசியல் பயணம் மட்டுமல்ல. ரசாயன விவசாயத்தால் குறிப்பாக எண்டோசல்பான் தெளிக்கப்பட்டதால் கேரள மக்கள் எந்த அளவுக்கு பாதிப்புக்கு உள்ளானார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இன்னும்கூட இந்த பாதிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிருக்கிறது. இயற்கை விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். வேலைவாய்ப்பை பெருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கும்மணம் ராஜசேகரன் அளித்த வாக்குறுதிகள், வாக்காளர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
விமோசன யாத்திரையின் போது பல்வேறு சமுதாய சங்கங்களின் அலுவலகங்களுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார் கும்மணம் ராஜசேகரன். அதுமட்டுமல்லாமல், மத பேதத்தையும் அவர் அண்டவிடவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் பேராசிரியர் ஜோசப்பின் கையை இஸ்லாமிய அடிப்படை வாதிகள் வெட்டி எறிந்தனர். மூவாற்றுப்புழைக்குச் சென்று கும்மணம் ராஜசேகரன், பேராசிரியர் ஜோசப்பை சந்தித்துப் பேசினார். பாதிரியார்களையும் மௌல்விகளையும் கூட அவர் சந்தித்து பயனுள்ள வகையில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கோவாவில் ஹிந்துக்கள் கட்டாயமாக கிறிஸ்தவத்துக்கு மதமாற்றம் செய்யப்பட்டார்கள். அப்போது சுமார் 7 லட்சம் பேர் அங்கிருந்து புலம் பெயர்ந்து கேரளாவுக்கு வந்தார்கள். கோவாவை பூர்வீகமாகக் கொண்ட அவர்கள், இப்போதும் தங்களது மரபில் பற்றுறுதியுடன் இருக்கிறார்கள். இவர்களை கும்மணம் ராஜசேகரன் சந்தித்துப் பேசியது உணர்வு பூர்வமான நிகழ்வாக இருந்தது.
கேரளாவில் பாதிரிகளின் ஆதிக்கம் வலுவானது. சபரிமலையில் நிலத்தை அபகரிக்க பாதிரிகள் முயன்றனர். அதை எதிர்த்து மூத்த சங்க பிரச்சாரக் பி. மாதவ்ஜி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கும்மணம் ராஜசேகரன் முக்கிய பங்கு வகித்தார். இந்தப் போராட்டம் ஹிந்துக்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தது. இதைப் போல கும்மணம் ராஜசேகரன் நடத்தியுள்ள விமோசன யாத்திரையும் கேரள அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை ஆழமாகவும் அழுத்தமாகவும் உள்ளது. டூ
முஸ்லிம் பெண்மணி அளித்த வரவேற்பு
அதிகா என்ற முஸ்லிம் பெண்மணி பிரதமர் மோடியின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு பாஜகவின் ஆதரவாளராக மாறினார். ஆர்எஸ்எஸ்ஸின் ஏஜெண்ட் கும்மணம் ராஜசேகரன் என்று மார்க்சிஸ்ட் குண்டர்கள் முகநூலில் பதிவிட்டபோது, அதற்கு அதிகா உடனே பதிலடி கொடுத்தார்.
கும்மணம் ராஜசேகரன், ஆதிவாசிகளின் குடிசைகளுக்குச் சென்று கஞ்சி குடிக்கிறார், ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கியப் புள்ளியான பினரயி விஜயன் 5 நட்சத்திர உணவகத்தில் சாப்பிடுகிறார். இந்த முரண்பாட்டை சுட்டிக்காட்டிய அதிகா, கும்மணம் ராஜசேகரனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் உளப் பூர்வமாக கலந்துகொண்டார். அவரது செயல்பாடு கும்மணம் ராஜசேகரனை நெகிழச் செய்துவிட்டது.
கேரளாவில் கமலம் மலரும்
கும்மணம் உறுதி
கடந்த சில வாரங்களாக விமோசன யாத்திரை நடத்தினீர்கள். இதற்கு மக்களிடையே வரவேற்பு எப்படி?
மிகுந்த வரவேற்பு கிடைத்தது. சென்ற இடமெல்லாம் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். கட்சி எல்லைகளைக் கடந்து ஏராளமானோர் இதில் பங்கேற்றனர். மார்க்சிஸ்ட், காங்கிரஸ் ஊழியர்களும் பாஜகவில் சேர்ந்தனர். பெண்களும் சிறுபான்மையினரும் கூட யாத்திரையில் பங்கேற்றனர். பாஜகவை மதவாத கட்சி என்றோ சிறுபான்மையினருக்கு விரோதமான கட்சி என்றோ இனியும் முத்திரை கேரளாவில் தாமரை மலரும் நேரம் நெருங்கிவிட்டது.
பாஜக ஆட்சிக்கு வந்தால் எதற்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள்?
யாத்திரை முழுவதும் நான் அடிக்கடி குறிப்பிட்டபடி உணவு, நிலம், நீர், வேலைவாய்ப்பு, சமநீதி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்போம். கேரளாவை தொழில் ரீதியாக முன்னேற்றுவோம். நிதி மோசடி குறித்து ஆய்வு நடத்தி அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்போம். இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்போம். உண்மையில் கேரளா விவசாய மாநிலம்தான். ஆனால் இதை களங்கப்படுத்திவிட்டார்கள். மீண்டும் சிறந்த விவசாய மாநிலமாக கேரளாவை எழுச்சியுற வைப்போம். தற்சார்பு மிக்க கேரளாவை உருவாக்குவோம்.
பல்வேறு சமூக அமைப்புகளோடு நீங்கள் தொடர்பு வைத்துள்ளீர்கள். இந்த அணுகுமுறை மூலம் பாஜக எந்த அளவுக்கு பயன் அடைய முடியும் என்று நினைக்கிறீர்கள்?
எல்லா சமூக அமைப்புகளோடும் நல்லுறவு வைத்துள்ளேன். யாத்திரை முடிவடைந்த பிறகு இதை இன்னும் வலுப்படுத்த முயற்சி செய்வேன். தெளிவாக வரையறை செய்யப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் சமூக ஒருங்கிணைப்பை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்.
ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன தலைவர் வெள்ளப்பள்ளி நடேசன் தொடங்கியுள்ள பாரத தர்ம ஜன சேனா உடனான கூட்டணி?
மார்ச் முதல் வாரத்தில் பாஜக – தர்ம ஜன சேனா கூட்டணி அமைந்தது. தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
கேரள போலீஸ் பாரபட்சம் இன்றி செயல்படுகிறதா?
மார்க்சிஸ்டுகள் ஆட்சியில் இருந்தால் அவர்களுக்கு ஏற்பவும் காங்கிரஸார் ஆட்சியில் இருந்தால் அவர்களுக்கு ஏற்பவும் கேரள போலீஸ் செயல்படுகிறது. அந்த அளவுக்கு இந்த இரண்டு கட்சிகளும் கேரள போலீசாரை கெடுத்து வைத்துள்ளனர்.
கல்வித் துறையை சீரமைக்க குறிப்பிட்ட திட்டம் ஏதும் வைத்துள்ளீர்களா?
கல்வித் துறையை நிகழ்காலத் தேவைக்கு ஏற்ப செம்மைப்படுத்தவும் மோடி அரசு சிறந்த வழிகாட்டுதலை அளித்து வருகிறது. தேசம் வளமும் வளர்ச்சியும் பெற உகந்த வகையிலும் நாட்டுப் பற்றை வளர்க்கும் வகையிலும் கல்வித் துறையில் சீர்திருத்தம் கொண்டுவரப்படும்.
பாடகியின் உருக்கம்
ருக்கியா என்ற 63 வயதான மலையாளப் பாடகி கடந்த காலத்தில் காங்கிரஸ் கட்சிக்காகவும் மார்க்சிஸ்ட் கட்சிக்காகவும் பாடியுள்ளார். ஆனால் இரண்டு கட்சியினரும் அவரை கண்டுகொள்ளாமால் தவிக்க விட்டுவிட்டனர். முதுமை காரணமாக, முன்புபோல் ருக்கியாவால் பாட முடியவில்லை. இதனால் அவர் பொருளாதார ரீதியாக மிகவும் நலிந்துள்ளார். அவரது கணவர் 8 ஆண்டுகளுக்கு முன் காலமாகிவிட்டார். அவருக்கு குழந்தைகளும் கிடையாது.
இப்போது பாஜக தொண்டர்கள் சிலர்தான் அவருக்கு உதவி செய்து வருகிறார்கள். கும்மணம் ராஜசேகரனை ராஜேட்டன் என்று பாசமுடன் அழைப்பது வழக்கம். இனிமேல் ராஜேட்டனை ஆதரித்து மட்டுமே பாடுவேன். வேறு யாரைப்பற்றியும் பாடமாட்டேன். தாமரைதான் எனக்கு தஞ்சம் அளித்துள்ளது” என்று ருக்கியா உருக்கமாகக் கூறியுள்ளார்.
முஸ்லிம் ஓட்டுனர் சியாத்
கும்மணம் ராஜசேகரனின் விமோசன யாத்திரையில் அவரது வாகன ஓட்டுனராகப் பங்கேற்றவர் ஒரு முஸ்லிம். அவரது தந்தை கருகல் செரில் குஞ்சுமுகமது என்பவர். எரட்டுப்பெட்டா ஊரில் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியராக செயல்பட்டவர் குஞ்சுமுகமது. அவரது மகன் சியாத்தும் மார்க்சிஸ்ட் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். கும்மணம் ராஜசேகரின் வாகன ஓட்டுனராக செல்ல முதலில் சியாத் பிறகு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். இதற்கு கும்மணம் ராஜசேகரனின் கனிவார்ந்த அணுகுமுறைதான் காரணம். 5 முறை தொழுகை நடத்திவருகிறேன். நான் இவ்வாறு தொழுகை நடத்த கும்மணம் ராஜசேகரன் பெரிதும் உறுதுணையாக உள்ளார். அவர் மத ரீதியாக எந்த பாகுபாடும் பார்ப்பதில்லை. ஆனால் மார்க்சிஸ்டுகள் சொல்வது ஒன்று. செய்வது வேரொன்று. இனிமேல் நான் தாமரைக்கே வாக்களிப்பேன் என்று 27 வயதான சியாத் கூறுகிறார்.