தந்தி டிவியில் அக்டோபர் 24 அன்று ஒரு விவாதததில் மனுஷ்யப்புத்திரன் கலந்து கொண்டார், விவாதம் சாகித்ய அகாடமி விருது பெற்றவர்கள் விருதை திருப்பி ஒப்படைப்பது பற்றி திருப்பிக் கொடுத்த எழுத்தாளர்களுக்கு ஆதரவாக சாகுல் ஹமீதும் ஆழி செந்தில்நாதனும் கலந்துகொள்ள, திருப்பிக் கொடுப்பது அரசியல் காரணங்களால் என்று வாதாட பாஜகவின் நாராயணன் திருப்பதியும் எழுத்தாளர் ம.வெங்கடேசனும் கலந்து கொண்டனர்.
ம. வெங்கடேசனின் ‘ஈவேராவின் மறுபக்கம்’ என்ற புத்தகம் தி.க காரர்களால் இன்னமும் பதில் சொல்லப்படாமல் இருக்கிறது. ஈ.வே.ரா வின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்தும் புரோக்கர்களை புரட்டிப்போட்ட புத்தகம் அது. அம்பேத்கரை ஆழமாகக் கற்றுள்ள ம.வெ அம்பேத்கரின் மதமாற்றம் ஏன் என்பது உட்பட நல்ல பல ஆய்வு நூல்களை படைத்துள்ளவர். சிறந்த சிந்தனாவாதி, ஆய்வாளர். இது போதாதா எழுத்துலக இடதுசாரி ஆதிக்கவாதிகளுக்கு? யார் சிறப்பானவர்களோ அவர்களை கேலி செய்து அவர்களின் மனோபலத்தை உறிஞ்சுவதோடு அவர்பற்றி பலவீனமான கருத்தையும் மக்கள் மத்தியில் பதிய வைத்துவிட்டால் போதுமே? நாடு முழுவதும் இடதுசாரிகளின் செயல்திட்டம் இதுதான். ஏற்கனவே இந்த வித்தையை சன் டிவியில் ம.வெ மீது சாகுல் ஹமீது முயற்சி செய்து பார்த்தாயிற்று. ம.வெ. இளைஞர். மீடியா விவாதங்களுக்குப் பழக்கமில்லாதவர். எனவே சன் டிவியில் அந்தத் தாக்குதல் ம.வெ வுக்கு அதிர்ச்சி அளித்தது. அதனால் தடுமாற்றம் ஏற்பட்டது, இந்த முறை அப்படி அல்ல.
நெறியாளரை நோக்காமல் தன்னை நோக்கி அச்சுறுத்தும் வண்ணம் ஆக்ரோஷமாகத் திரும்பிய சாகுல் ஹமீதை சற்றும் சட்டை செய்யாமல் தனுஷ் பட ஜோக் காட்சி போல நீங்க சொல்லுங்க..நீங்க சொல்லுங்க என்று உசுப்பேத்த.. அவர் வாயப் பொத்து என்று சொல்ல, நீங்க யார் என்ன வாயப் பொத்த சொல்ல என்று இவர் கூற ஸ்டுடியோவே இவர்களைப் பார்க்கத் துவங்கியதாம். திடீரென்று இவர்கள் ஹிந்து வெறியர்கள் என்னை கொலையும் செய்து விடுவார்கள் என்று சாகுல் ஹமீது கூற சற்றும் தாமத்திக்காமல் இவர்தான் இஸ்லாமிய தீவிரவாதி. இவர்கள்தான் கொலை செய்வார்கள் என்று பதிலடி கொடுத்தார் ம.வெ.
நான் இங்கு எழுத்தாளனாக வந்துள்ளேன், எங்கே வந்தது இஸ்லாம் என அவர் கேட்க, சர்லி ஹாப்டோ விஷயத்தில் இவர் எப்படிப் பேசினார் என்று கூறி இவர் இஸ்லாமிய தீவிரவாதி இஸ்லாமிய தீவிரவாதி என மீண்டும் மீண்டும் ம.வெ கூற அவரும் திருப்பிக் கத்த, நெறியாளர் ஹரிஹரன் நிகழ்ச்சியை வருத்தத்துடன் பத்து நிமிடத்துக்கு முன்பே முடித்துவிட்டார். ம.வேயும் சரி, நாராயணன் திருப்பதியும் சரி, நன்கு ஆதரத்தோடு வாதிட்டதை அவர்களால் எதிர் கொள்ள இயலவில்லை. ம.வெ கூறாத வார்த்தையான துலுக்கன் என்ற வார்த்தையைக் கூறி இவர் என்னை அப்படிக் கூறிவிட்டார் என்று மீண்டும் மீண்டும் சாகுல் ஹமீது கூற அந்த வார்த்தை வலையில் ம.வெ விழவில்லை.
சம்பவத்தைத் தொடர்ந்து இடதுசாரி எழுத்தாளர்கள் தங்கள் தங்கள் முகநூலில் தந்தி தொலைக்காட்சியை கண்டித்தும் ம.வெ உட்பட ஹிந்துத்வ பிரதிநிதிகளை மட்டமாக விமர்சித்தும் பதிவு செய்தனர். அப்படி பதிவு செய்த இடதுசாரி கு ழுமத்தைச் சேர்ந்த நலங்கிள்ளி ஹிந்துதவ பிரதிநிதிகளின் நோக்கத்தை மட்டமாக விமர்சித்தாலும் இந்த அசம்பாவிதத்திற்குக் காரணம் மனுஷ்யபுத்திரன் தான் என தெளிவுபட எழுதியுள்ளார்.
மனுஷ்யபுத்திரன் போன்ற ஜோக்கர்களின் காரணமாக தொலைக்காட்சி விவாதங்கள் தரத்தை இழந்து வருகிறது. தந்தி டிவியின் இந்த விவாதம்
யூ டியூபில் உள்ளது. ம.வெ-யின் விளக்கங்கள் அவரது முகநூலில் உள்ளது. படித்து, பார்ப்பவர்களுக்கு உண்மை புரியும்.
ரங்கராஜன் பாண்டே வீரமணியையும் ஜவஹருல்லாவையும் உமாசங்கரையும் தோலை உரித்துக் காயப் போட்டதைத் தொடர்ந்தே அவருக்கு ஹிந்துத்வ முத்திரை குத்தப்பட்டு விட்டது. இப்போது நேர்மையாக, இன்னமும் சொல்லப்போனால் எம்.எஃப் உசேனையும் பெருமாள் முருகனையும் ஆதரித்துப் பேசியும் கூட ஹரிஹரனுக்கும் அந்த முத்திரை குத்தப்படுகிறது. மக்கள் டிவியில் இருந்து இங்கு மாறி வந்தவர் ஹரி என்பதையும் மறந்து, இவர்களின் நெறியில் நடக்கும் ‘ஹிந்துதவ பஜனை’ என்று கூறப்பட்டாலும் இன்று டி.ஆர்.பி. ரேட்டிங்கில் தந்திதான் முதலில் உள்ளது. ஒரு நெறியாளர் நினைத்தால் தன் போக்கிற்கு ஒரு விவாதத்தைக் கொண்டு செல்ல முடியும் என்பதை இடதுசாரிகள் இப்போது ஒப்புக் கொண்டுள்ளனர். இதைத் தானே நாங்கள் பல காலமாய் சொல்லி வந்தோம். இடதுசாரி ஹிந்துவிரோத பஜனைகளே பல தொலைக்காட்சியின் விவாதங்களாக உள்ள நிலையில் ஒரு ஹிந்துத்வ பஜனை வரக்கூடாததா என்ன ? இதுக்கே இத்தனை ரத்தக் கொதிப்பா..?
நன்றி; நம்பி நாராயணன்