சியாச்சின் பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்க 150 ராணுவ வீரர்கள் சுமார் 5 நாட்களாக மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். அப்பொழுது, ராடார் கருவி, 35 அடி ஆழத்தில் மனிதன் புதையுண்டு இருப்பதைக் காட்டியது. உடனடியாக, மீட்புப் பணியில், ராணுவத்தில் பணிபுரியும் நாகள் பயன்படுத்தப்பட்டன. அவை, சரியாக எந்த இடத்தில் அம்மனிதரின் உடல் இருக்கின்றது என்பதை தங்களது மோப்ப சக்தியால் அறிந்து, ராணுவ வீரர்களுக்குக் காட்டியது மட்டுமல்லாமல், பனிக்கட்டிகளை அப்புறப்படுத்தவும் உதவி செதன. பேட்டரிகளால் இயங்கக்கூடிய விசேஷ பனிக்கட்டி ரம்பங்களைக் கொண்டு 35 அடி ஆழத்திற்கு பனிக்கட்டிகள் உடைத்து பாதை உருவாக்கப்பட்டது. அங்கு அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.
லான்ஸ் நாயக் ஹனுமந்தப்பா செயலற்ற நிலையில் கிடந்தார். அவரை, பிரத்தியேக விமானம் மூலம், டெல்லியில் உள்ள ராணுவ தலைமை மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர் ராணுவத்தினர். ஹனுமந்தப்பா விரைவில் குணம் பெற வேண்டும் என்று நாடு முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
ஹனுமந்தப்பாவை பிரதமர் மோடியும், ராணுவ அமைச்சர் மனோகர் பரிக்கரும் நேரில் சென்று சந்தித்தனர். ஆனாலும், சிகிச்சை பலன் அளிக்காமல் பிப்ரவரி 11 அன்று ஹனுமந்தப்பா உயிர் நீத்தார். அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ள இந்த நிகழ்வு, பாரத ராணுவத்தின் வரலாற்றில் மிகவும் சோகம் நிறைந்த நாளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.