ஆர்.எஸ்.எஸ், ஆர்.எஸ்.எஸ் என்கிறார்களே, அப்படியென்றால்? ஹிந்து சக்தியாக ஆர்.எஸ்.எஸ்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தாம்பரத்தில் ஒரு முஸ்லிம் அமைப்பு ஒரு ஊர்வலத்தை நடத்தினார்கள். அதில் அவர்கள் முழங்கிய ஒரு கோஷம்: இமயம் முதல் குமரி வரை நாங்கள் ஆண்ட நாடடா என்பது. அவர்கள் குறிப்பிடுவது ஔரங்கசீப், அக்பர், பாபர் காலத்தை. உண்மைதானே…! 800 வருடங்கள் நம்மை ஆட்சி செய்தார்களே! வீரசிவாஜி போன்ற வீரர்களால் முஸ்லிம் ஆட்சி ஒரு முடிவுக்கு வந்தது.  அடுத்து தராசு ஏந்தி வியாபாரத்திற்கு வந்த ஒரு கூட்டத்திற்கு நாம் 200 ஆண்டுகள் அடிமையானோம். ஆங்கிலேயர் ஆட்சி என்று சொன்னாலும் அது கிறிஸ்தவர்களின் ஆட்சியே.  ஹிந்துக்களிடையே ஒற்றுமை இல்லாமல் நமக்குள் போட்டியும் பொறாமையும் இருந்த காரணத்தால் அடிமையானோம். டாக்டர் ஹெட்கேவார் ஹிந்துக்களை ஒற்றுமைப்படுத்த முடிவெடுத்தார். அதற்காக அவர் துவக்கிய இயக்கம்தான் ஆர்.எஸ்.எஸ்.

சேவகனாக ஆர்.எஸ்.எஸ்.

சீனா 1962லும் 1965, 1971 ஆகிய ஆண்டுகளில் பாகிஸ்தானும் நம் நாட்டின் மீது படையெடுத்தன. எல்லைப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் ராணுவத்திற்கு பக்கபலமாக பணியாற்றினார்கள். ரத்ததானம், உணவு தயாரித்து வழங்கல் போன்ற வேலைகளை அற்புதமாக செய்தார்கள். அதேபோல் பூகம்பம், வெள்ளம், புயல் போன்ற இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்படும் காலகட்டங்களில் ஓடோடி வந்து  முதல் ஆளாக தொண்டுப் பணிகளில் ஈடுபட்டு வருவது ஆர்.எஸ்.எஸ்ஸின் சிறப்பு.

‘ஆள்’ ஆக்குவது ஆர்.எஸ்.எஸ்.

உலகில் எந்த அமைப்பிலும் இல்லாத ஒர் செயல் திட்டம் ஆர்.எஸ்.எஸ்ஸில் மட்டுமே உண்டு. அதாவது அதன் உறுப்பினர்கள் காலை, மாலை, இரவு ஏதாவது ஒரு நேரத்தில் ஒரு பொது மைதானத்தில் ஒரு மணி நேரம் தினசரி சந்திக்க வேண்டும். இதற்கு ஷாகா என்று பெயர். 1925ம் ஆண்டு விஜயதசமி அன்று நாகபுரியில் துவங்கிய ஷாகா அமைப்பு இன்று நாடு முழுவதும் வியாபித்துள்ளது. ஷாகாவில் உடலுக்கு நல்ல பயிற்சியும் மனம், அறிவிற்கு நல்ல பயிற்சியும் அளிக்கப்படுகிறது. தேசபக்தி, ஒழுக்கம் ஆகிய பண்புகள் உள்ள 100 இளைஞர்களை எனக்குத் தாருங்கள், நான் இந்த தேசத்தையே மாற்றிக் காட்டுகிறேன் என்றார் சுவாமி விவேகானந்தர். நூறல்ல, லட்சோப லட்சம் தொண்டர்களை ஆர்.எஸ்.எஸ். உருவாக்கி வருகிறது.

கவசமாக ஆர்.எஸ்.எஸ்.

கிறிஸ்தவர்கள் கோடிக்கணக்கில் அந்நிய நாடுகளில் இருந்து பணத்தைக் கொண்டுவந்து குவித்து ஆஸ்பத்திரி, பள்ளி, கல்லூரி, முதியோர் இல்லம் என்ற  பெயரில் அப்பாவி ஹிந்துக்களை ஏமாற்றி மதமாற்றி வருகிறார்கள். அவர்களின் ஒரே நோக்கம் பாரதத்தை ஒரு கிறிஸ்வத நாடாக மாற்றவேண்டும் என்பதே. அதேபோல முஸ்லிம்கள் இந்த நாட்டை ஒரு முஸ்லிம் நாடாக்க முயற்சித்து வருகிறார்கள். லவ் ஜிகாத் மூலம் அப்பாவி ஹிந்துப் பெண்களை ஏமாற்றி முஸ்லிமாக மதமாற்ரி வருகின்றனர்.  உலகில் முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கென ஏராளமான நாடுகள் உள்ளன. ஹிந்துக்களுக்காக இருக்கும் ஒரே நாடு பாரதம் மட்டுமே. இதற்காக பணியாற்றி வருகிற இயக்கம்தான் ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் அஸ்திவாரம் ஆனவர்

மார்ச் 18ம் தேதி யுகாதி பண்டிகை. பெரும்பாலானோர் அதை தெலுங்கு வருஷப் பிறப்பு என்கின்றனர். தெலுங்கு வருஷப் பிறப்பு, கன்னட வருஷப் பிறப்பு, குஜராத்தி வருஷப் பிறப்பு என்பதெல்லாம்  கிடையாது.  நமது முன்னோர்கள் ஆண்டைக் கணக்கிடும் முறையில் இரண்டு முறைகளை கடைப்பிடித்தனர். சூரியனை மையமாக வைத்து (ஸௌரமானம்) ஒரு கணக்கீடும் சந்திரனை மையமாக வைத்து (சாந்த்ரமானம்) ஒரு கணக்கீடும் ஏற்படுத்தினர். சித்திரை முதல் தேதி நாம் தமிழ்ப் புத்தாண்டு என்று கொண்டாடுவது சூரியனை மையமாக வைத்து கணக்கிடப்படுவது. தமிழகம், கேரளம், பஞ்சாப், மேற்கு வங்காளம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் இந்த முறை கடைப்பிடிக்கப்படுகிறது.சந்திரனை மையமாக வைத்து கணக்கிடப்படுவதைத்தான் யுகாதி என்றும் தெலுங்கு வருஷப் பிறப்பு என்றும் கொண்டாடுகிறோம். ஆந்திரா, கர்நாடகா, ஹிந்தி பேசும் மாநிலங்களில் இந்த முறையே கடைப்பிடிக்கப்படுகிறது.

 

திருச்சி ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, மதுரை போன்ற நகரங்களுக்குள்  நுழையும்போது நம்மை வரவேற்பது பிரம்மாண்டமான கோயில் கோபுரங்களே. வெகு தொலைவிலேயே கோபுரங்களும் அதன் மீதுள்ள கலசங்களும் நமக்குத் தெரியும். ஆனால்  அந்த கோபுரத்தைத் தாங்கி இருக்கும் அஸ்திவாரம் நம் கண்களுக்குத் தெரியாது. அதுபோல் நம்மில் பலருக்கு ஆர்.எஸ்.எஸ் தெரியும். ஆனால் அதனை துவக்கியவர் யார், எதற்காகத் துவக்கினார் என்று தெரியாது. ஆர்.எஸ்.எஸ்ஸைத் துவக்கியவர் டாக்டர் ஹெட்கேவார். இவர் பிறந்தது 1889ம் ஆண்டு யுகாதி திருநாள் அன்று. அவர் இந்த அமைப்பின் கோபுர கலசமாக இல்லாமல் அஸ்திவாரமாக தன்னை அமைத்துக் கொண்டார். அதனால் யுகாதி திருநாளன்று அவரை நினைவுகூர்வோம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *