அயோத்தி தீர்ப்பு பற்றி முக்கிய பிரமுகர்கள் கருத்து

தடா பெரியசாமி

வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு.

ஹிந்துக்களின் இறை நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் அவர்கள் உணர்வுக்கும், மதிப்பளித்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சகோதரத்துவ அடிப்படையில் அவர்களுக்கும் சாதகமாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சென்டரலங்கார  ஜீயர்

லட்சக்கணக்கான கர சேவகர்களுக்கு கிடைத்த வெற்றி இது. நீதிமன்றம் எல்லாவிதமான ஆதாரங்களையும், அலசி ஆராய்ந்து நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. முஸ்லிம்களுக்கு அந்த இடத்தில் உரிமை உள்ளதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ஹிந்துக்களின் நம்பிக்கைக்கும், போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி இது. சங்கப் பரிவார அமைப்பினர் ஒவ்வொரு ஹிந்துவின் வீட்டிற்கும் இந்த பிரச்சினையை எடுத்தச் சென்றதன் வெற்றி இது.

தேவநாதன் யாதவ்

வரவேற்கதக்கத் தீர்ப்பு இது. எங்களின் நம்பிக்கை அயோத்தில் ராமர் பிறந்தார் என்பது. ஒட்டுமொத்த ஹிந்துக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த தீர்ப்பு இது. ராமர் கோயில் அயோத்தியில் கட்டாமல் பாகிஸ்தானிலா கட்டமுடியும்.

ஸ்ரீ பெரும்புதூர்  ஜீயர் 

மிக சரியான தீர்ப்பு . வரவேற்கிறேன்.