வள்ளலார்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் என்று அழைக்கப்படும் திருவருட்பிரகாச ராமலிங்க அடிகளார், பத்தொன்பதாம் நூற்றாண்டின் மகான்களுள் முதன்மையான ஒருவராகக் கருதலாம். மேட்டுக்குப்பம் எனும் கிராமத்தில் ராமய்யா பிள்ளை எனும் கருணீகர் மரபிலே வந்த ஒரு தமிழ் புலவர். அவர் தினை பள்ளிக்கூடம் நடத்தி பிழைப்பை நடத்தினார். அவரின் துரதிர்ஷ்டம் அவருக்கு ஐந்து முறை திருமணம் ஆகி ஐந்து மனைவிமார்களும் மனம் முடிந்த சிறு காலத்திலேயே மரணமடைந்துவிட்டனர். ஆறாம் முறை சின்னம்மை என்ற பெண்ணை மணந்தார். தில்லை நடராஜரின் ஆழ் பக்தன் ஆன ராமய்யா இம்முறையாவது தன மனைவி காப்பாற்றப்படவேண்டும் தங்களுக்கு ஒரு நல்ல இல்லற வாழ்க்கை அமைய வேண்டும் என அம்பலவாணனிடம் வேண்டிக்கொள்ள, சின்னம்மை நாளடைவில் சபாபதி, பரசுராமன் என்ற இரண்டு ஆன் பிள்ளைகளையும் பிறகு உண்ணாமுலை, சுந்தரம்மா என்ற இரண்டு பெண் குழந்தைகளையும் பெற்று எடுத்தாள். குடும்பம் பெறுக, ராமய்யாவிற்கு பள்ளிக்கூடத்தில் கிடைத்த வருமானம் போதாதையால் கருங்குழியில் கிராம கணக்கு வேலையும் பார்த்தார். இப்படி இருக்ககையில் ஒரு ஆருத்திரா விரத நாள் அன்று ராமய்யா வெளியே சென்றிருந்த பொது சிவபெருமான் வந்து சின்னம்மையின் கையால் உணவு உண்டு அவள் நெற்றியிலும் வாயிலும் திருநீறை இட்டு, அவள்  ஜோதியே பிள்ளையாக பெற்றேடுப்பாள் எனக்கூறிவிட்டு மறைந்தார். அதே மாதம் சின்னம்மை கருவுற்று புரட்டாசி 29 ஞாயிற்றுக்கிழமை அன்று ராமலிங்கம் பிறந்தார்.  சுந்தரம்மை பிறந்து பத்து வருடங்கள் ஆகியிருந்தது. ராமலிங்கம் ஐந்து மாதக் குழந்தையாக இருக்கும்போது குடும்பத்தோடு ராமய்யா சிதம்பரம் சென்று தில்லை நடராஜரை தரிசனம் செய்யும் பொது அந்த சிறு குழந்தை நடராஜப்பெருமானிற்கு தீப ஆராதனை செய்வதை உன்னிப்பாக கவனித்து கலகலவென்று சிரித்தது. அங்கிருந்த தீக்ஷிதர் இவ்வாறு சிரிக்கும் இவ்வளவு சிறிய குழந்தையை பார்த்ததும் இல்லை கேள்வியும் பட்டதில்லை என்று சொல்லி, தெய்வக் கிருபையால் மட்டுமே இவ்வாறு அது சிரித்திருக்க முடியும் என்று சொன்னார். துரதிர்ஷ்டவசமாக அடுத்த மாதமே … Continue reading வள்ளலார்